சச்சின் சரவெடி கொளுத்துவார் என எல்லோரும் எதிர்பார்க்கும் சில போட்டிகளில் ஹர்பஜன்சிங் வந்து பட்டையை கிளப்பி எல்லோரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைப்பார்.
ஒ. பன்னீர்செல்வம், பிரதீபா பாட்டில் இவர்கள் இருவரையும் பற்றி பெரும்பாலனவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, இவர்கள் மிக பொறுப்பான பதவிகளுக்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்படும்வரை. ஏறக்குறைய அதே நிலைமைதான் இங்கு பார்க்கப்படபோகும் பெரும்பாலான தொகுதிகளின் நிலைமையும்.
மாமனிதர்களை மண்ணைக் கவ்வச்செய்வது முதல், தீடீர் தலைவர்களை உருவாக்குவது வரை இந்த தொகுதிகள் செய்த, செய்து கொண்டிருக்கும் ஜாலங்கள் பலப் பல. இந்த தொடரின் தொகுதிகள் தமிழக தேர்தல் வரலாற்றுப் பக்கங்களில் எழுப்பிய அதிர்ச்சிகள் இன்றளவும் ஒவ்வொரு தேர்தலின் போதும் எல்லா அரசியல் கட்சிகளாலும் புரட்டிப்பார்ககப் படுகிறது.
“All is Fair in Love and War” இதை கொஞ்சம் மாற்றி “ All is Fair in Elections Results too” என எழுத முற்பட்டது இந்த தொடரின் முதலாவதாக வரும் இந்த தொகுதியின் தேர்தல் வரலாறு.
பல கட்சிகள்/வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், பொறி பறந்தது இரு கட்சிகளுக்கிடையேதான், விஷயம் களத்தில் நின்றவர்களின் முற்றிலும் வேறுபட்ட நேர் எதிரான பிண்ணனிகள்.
இரண்டு கட்சிகள், ஒன்று புது ரத்ததுடன் முரட்டுக்காளையாய் திமிறிக்கொண்டு களத்தில் இறங்கியது, மற்றொன்று யானை பலத்துடன் அசகாய வலிமையுடன் களத்தில் இறங்கியது.
ஒரு கட்சி கடந்த காலத்து சாதனைகளை பட்டியலிட்டது, மற்றொன்று நாளைய
விடியலை மக்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.
அதிர்ச்சி, ஆச்சரியம் இரண்டையும் சம விகிதத்தில் கலந்து கொடுத்து கட்சிகளை மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்த அந்த தொகுதி………
(தொடரும்)
Thursday, October 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
:)
விருதாச்சலம்?
word verification எடுத்துடுங்களேன்..
ஜெகதீசன், அது வேற தொகுதியை மனசுல வச்சு எழுதனது, விருதாச்சலம் இன்னும் ரொம்ப தூரம், கவர் பண்ணுறேன்.
word verification - matter yennannu parthu correct panniduren.
Thnx.
Post a Comment