
தீக்குச்சியாய் எரிந்தணைந்தாய்
தீபமாய் மற்றவர் வாழ.
இறந்தும் உயிர்கொடுத்தாய்
இருண்டவர் விழிகளில் ஒளிகொடுத்தாய்
மரணத்திற்கு உன்
வாழ்க்கையை பரிசாக்கினாய்
மற்றவரின் உடலில் கரைந்து
அவர் வாழ்க்கையை ஒளியாக்கினாய்
மூன்று நாட்கள் கழித்து
உயிர்த்தெழுந்தான் தேவன்
உலகை இரட்சிப்பதற்காக...
முப்பது நிமிடங்களில்
உயிர்தெழுந்தாய் நீ
இன்னொரு உயிர் காப்பதற்காக
மரித்துப்போகும் மனிதனுக்கு
இரங்கற்பா எழுதும் பேனாக்கள்
இனி
மரணத்தை வென்று வாழும்
உனக்கு வாழ்த்துப்பா எழுதட்டும்.

1 comment:
மறைந்தும் மறையா! ஹிதேந்திரனுக்கு அஞ்சலி!
http://aammaappa.blogspot.com/2008/09/blog-post_24.html
Post a Comment