Showing posts with label தேசம். Show all posts
Showing posts with label தேசம். Show all posts

Sunday, February 24, 2019

புல்வாமா

மகனாக, தந்தையாக, கணவனாக, சகோதரனாக, நண்பனாக எல்லாவற்றிற்கும் மேலாக தங்களது அனைத்து சுக துக்கங்களையும் மறந்து தாய் நாட்டிற்காக இரவு பகலாக தங்களையே அர்ப்பணித்துக் கொண்டு விட்ட 40 வீரர்கள் புல்வாமா தாக்குதலில் அநியாயமாக தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மனசாட்சியே இல்லாத கோழைத்தனமான செயல். இந்த தாக்குதலின் பின்னால் இருப்பவர்கள் இதன் மூலம் சாதிக்கப்போவது ஒன்றுமே இல்லை. ஆனால் இறந்து போன வீரர்களின் குடும்பங்களின் இழப்பு எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாதது

ஒரு சாரசரி மனிதர் இறந்து போனால் அவர் குடும்பத்தினர் அழுகிறார்கள். ஒரு கட்சித் தலைவர் இறந்து போனால் அந்த கட்சியின் தொண்டர்கள் அழுகிறார்கள். ஒரு பாதுகாப்பு வீரர் இறந்து போனால் ஜாதி, மதம், மொழியை கடந்து தேசமே அழுகிறது.

Rest in Peace Sir