“நடிகையின் கதை” யில் ஆரம்பித்து தலைமை செயலக டெலிபோன் உரையாடல் வரை, எந்த ரகசியமானலும் சரி, மக்கள் அதன் மேல் காட்டும் ஆர்வம் இருக்கிறதே…அடடா…..இந்த ஆர்வம்தான் ஆரம்பித்து ஒரு மாதமே ஆன ஒரு வலைப்பூவிற்கு ஏறக்குறைய 6700 பிளஸ் பின் தொடர்பவர்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. ஒவ்வொரு பதிவும் சராசரியாக 300-450 பின்னூட்டங்களை பெறுகிறது/பெற்றுக்கொண்டிருக்கிறது.. மேட்டர் ரொம்ப சிம்பிள்…ஒரு அணியின் ஒவ்வொரு அசைவையும் யாரோ ஒரு முகமூடி தனது வலைப்பூவில் எழுதி இணையத்தில் ஏற்றிக்கொண்டே இருக்கிறார். மாட்டிக்கொண்ட அந்த அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ். தீ பற்றி எரிகிறது அந்த அணியில்.
அரசியல் எல்லைக்குள் மட்டுமே கபடி ஆடி கொண்டிருந்த இந்த இன்சைடர் ஸ்பை ஆப்ரேஷன் முதன்முறையாக ஐபிஎல் போட்டிகளுக்கு உள்ளேயும் நுழைந்துள்ளது. போட்டியை தொடர்கிறார்களோ இல்லையோ இந்த வலைப்பூவை நிறைய ரசிகர்கள் தொடர்வது சுத்தமாக தெரிகிறது. அழுகாச்சி டிவி சீரியலுக்காக அடுத்த நாள் வரை காத்திருக்க முடியாமல் தவிக்கும் தாய்குலங்கள் இந்த வலைப்பூவை தொடர்பவர்களிடம் தோற்பது உறுதி……அவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் அடுத்தத்து வெளிவந்துகொண்டே இருக்கும் பதிவுகளில்.
இந்த வலைப்பூவின் சாரம்சத்திற்காக உள்ளே நுழைந்தவர்கள் இப்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இதை எழுதிக்கொண்டிருப்பது யார் என வெத்தலையில் மை போட்டு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அருமையான ஆங்கில நடை, நக்கலான விமர்சனம், தோல்வின் மெல்லிய வலி என கலந்து கட்டி எழுதும் எழுத்துக்கள், கொல்கத்தா நைட் ரைடர்ஸின் தொடர் தோல்வியை சிறிது மறக்க செய்கின்றன. ஆரம்பத்தில் இந்த அணியைப் போலவே மந்தமாக இருந்த இந்த வலைப்பூ இப்போது டெல்லி டேர் டெவில்ஸ் ரேஞ்சில் ஹாட் ஆகிவிட்டது. அணியின் முதலாளி (ஷாருக்கான்) முதல் ஸ்பான்ஸர்ஸ் வரை, இந்த முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் உண்மையான முகம் யாரென தெரியாமல் மண்டை காய்ந்து போய் இருக்கிறார்கள். தெரிந்தவர்கள் ஷாருக்கை தொடர்பு கொண்டால் சன்மானம் உறுதி.
பற்றி எரிந்து கொண்டிருக்கும் இந்த மேட்டருக்கு அதை எழுதுபவரே இப்போது நெய்யையும் ஊற்றிவிட்டிருக்கிறார்…..ஆரம்பத்தில் ஐபிஎல்லின் இறுதி கட்டத்தில் தான் யார் என்பதை உலகுக்கு பகிரங்கப்படுத்தப்போவதாக அறிவித்தவர், தற்போது தனது முகமூடியை விலக்கி தான் யார் என்பதை உலகுக்கு தெரியபடுத்தவா அல்லது வேண்டாமா என ஒரு சிறிய சர்வே கேள்வியை தனது வலைப்பூவில் வைத்து மேலும் அனலை கூட்டியுள்ளார். இந்த சர்வே ஆரம்பித்த ஒரு வாரத்திற்குள் ஏறக்குறைய 55,000- க்கும் அதிகமானோர் ஒட்டளித்துள்ளனர். மொத்தமாக ஆறு கேள்விகளை கேட்டுள்ளார் மனிதர். அதிலும் அந்த கடைசி கேள்வி……ஹிட் விக்கெட் . சென்ஸ்-ஆப்-ஹுயுமரில் சிக்ஸர் அடித்துகொண்டிருக்கிறார் இந்த முகமூடி.
ஐபிஎல்-இன் இறுதிப்போட்டியில் யார் வென்றாலும் சரி, அது ஏற்படுத்தும் சலசலப்பை விட இந்த பதிவரின் முகமூடி விலகும்போது ஏற்படும் சலசலப்பு பட்டையை கிளப்பப்போவது நிஜம். இந்த முகமூடிக்கு பின்னால் இயங்கும் நபர் எந்த அணியின் வீரராக இருந்தாலும் சரி, அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரக்கூடிய சாத்தியம் அதிகம், கொஞ்சம் நஞ்சமாகவா கிழிக்கிறார்…நார் நாராக கிழித்து ஊறுகாய் போட்டுக் கொண்டிருக்கிறார். கேப்டன், முதலாளி, அணி மேனேஜர், கோச், சக வீரர்கள் என பேதமே இல்லாமல் சிதறடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்திய மீடியாக்கள் அரசியல் போதை தெளிந்தவுடன் தங்களுக்கு சரக்கு இல்லையே என கவலையே படத் தேவையில்லை. இந்த வலைப்பூ மற்றும் இவருக்கு பின்னால் இருக்கும் அந்த நபர் போதும்….ஒரு மாதத்திற்கு சர்குலேஷனை ஒப்பேற்றிவிடலாம். ஏற்கனவே “தி டெலிகிராப்” இந்த மேட்டரை அள்ளிக்கொண்டுவிட்டது…நம்மூர்காரர்களுக்கு மே 16 வரை தண்ணியை தலையில் ஊத்தினாலும் போதை தெளியாது. தெளியும் வரை மக்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். தட்ஸ் ஆல்.
அதிரடி சிக்ஸர், அட்டகாச பவுண்டரி என வீரர்கள் ஒருபுறம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அம்மணிகளின் ரவுசு மறுபுறம், இது இரண்டையும் தாண்டி ஐபிஎல்-ஐ சூடேற்றிக்கொண்டிருக்கிறது இந்த முகமூடியின் வலைப்பூ. சத்தமாக சொல்ல வேண்டும் போல தோன்றுகிறது “Cricket is no more Fool’s Game” என்று.
---------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: அந்த வலைப்பூவின் முகவரி. http://fakeiplplayer.blogspot.com/
---------------------------------------------------------------------------------------
Wednesday, May 13, 2009
Tuesday, May 5, 2009
கோபிநாத் – ஜெயபிரகாஷ் நாராயணன் – சரத்பாபு
வோட் பார் சேஞ்ச் (Vote for Change), பாரக் ஒபாமா முதல் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் வரை இன்றைக்கு உச்சரிக்கும் மந்திரம் இது. முழுநேர அரசியல்வாதிகள் இதை வெறும் வார்த்தையாக மட்டுமே சொல்லிக் கொண்டிருக்க, இதை செயலில் கொண்டு வருவதற்காக ஒவ்வொரு தேர்தலிலும் அவ்வப்போது சிலர் வெளியில் வந்து முயற்சி செய்வதுண்டு. இந்த தேர்தலிலும் சிலர் அந்த முயற்சியில் இறங்கி உள்ளார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு பெங்களூர் செல்வதற்காக டெல்லி விமான நிலையத்தின் மெயின் லாபிக்குள் நுழைந்தபோது ஒரு நபர் மிக சத்தமாக “சார் ஏர் டெக்கான் குவஹாத்தி, சார் ஏர் டெக்கான் குவஹாத்தி” என இரண்டு முறை கேட்டார், நான் இல்லை என தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்று அமர்ந்துவிட்டேன். என்னைத் தொடர்ந்து பின்னால் உள்ளே நுழைந்த அனைவரிடமும் அவர் அதே பாணியில் கேட்டுக் கொண்டேயிருந்தார். அந்த நபர் நின்றிருந்த இடம் குவஹாத்தி செல்லும் ஏர் டெக்கான் விமானத்தின் போர்டிங் கேட் அருகில்…குவஹாத்தி செல்லும் பயணிகளை கூவி கூவி அழைத்து உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார். மக்கள் சேவையை விமான நிலையத்தின் உள்ளே வைத்து கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொண்டிருந்தது ஏர் டெக்கான் நிறுவனம்.
கோயலும், மல்லையாவும் விமான டிக்கெட்டின் விலையை கூட்டி கொண்டிருக்க சத்தமே இல்லாமல் ஏர் டெக்கான் விலையை குறைத்து விளையாடிக் கொண்டிருந்தது. மிக குறுகிய காலத்தில் உருவாகி பரபரப்பை ஏற்படுத்தியோடு மட்டும் இல்லாமல் விலை குறைப்பில் இறங்கி லல்லுவின் ரெயில்வே துறையுடனும் மல்லுக்கு நின்றது ஏர் டெக்கான். கார்ப்பரேட் உலகத்தை தாண்டி சாதாரண நடுத்தர மக்களுக்கும் விமான பயணத்தை நனவாக்கிய பெருமை இந்த நிறுவத்திற்கு உண்டு, அப்படிபட்ட ஒரு துவக்கத்திற்கு முதல் புள்ளியாய் இருந்தவர் கேப்டன் கோபிநாத். தொழில் என்ற எல்லையை தாண்டி மனிதர் கொஞ்சம் மக்களைப் பற்றியும் சிந்தித்தனின் விளைவுதான் இந்த தாறுமாறான விலைகுறைப்பு ஐடியா.
மக்களை உயரத்திற்கு கொண்டு சென்றவருக்கு அந்த மாற்றம் மட்டும் போதுமானதாக தெரியவில்லை போல தெரிகிறது, மக்கள் சேவையே மகேசன் சேவை என நேரடியாக களத்தில் இறங்கிவிட்டார் மனிதர். கர்நாடகாவின் Hi-Fi தொகுதியான பெங்களூர் தெற்கு தொகுதியில் சுயேச்சையாக லேண்ட் ஆகி இருக்கிறார். இவரின் அறிவிப்பை தொடர்ந்து டேக்-ஆப் ஆன சலசலப்பு இன்னமும் அடங்காமல் இருப்பதுபோலத் தான் தெரிகிறது. காங்கிரஸ், பிஜேபி, ஜனதா என இங்கு போட்டியிடும் பெருந்தலைகளுக்கு இவரின் வேட்பாளர் அறிவிப்பு தூக்கத்தை கலைத்திருக்கும்.
மற்ற அரசியல்வாதிகள் போல லௌட் ஸீபீக்கர் வைத்து நோகடிக்காமல் அமைதியாக பிரசாரம் மேற்கொண்டவர். பூங்காக்களிலும், மக்கள் கூடும் பொது இடங்களிலும் நேரிடையாக சென்று பேசி ஒட்டு சேகரித்தது பெரும்பாலானவர்களை கவர்ந்துள்ளது. மாற்றத்தை தனது பிரசாரத்திலேயே செயல்முறைபடுத்த ஆரம்பித்தவர். தென் பெங்களூரின் பவர்புல் கார்ப்பரேட் உலகம் இவரை வெளிப்படையாக ஆதரிப்பது மிகப் பெரிய பலம்.
காற்றில் பறந்து சேவை செய்த இவருக்கு காற்றாடி சின்னத்தை வழங்கியிருக்கிறது தேர்தல் கமிஷன். எவ்வளவு உயரத்திற்கு இந்த காற்றாடியை மக்கள் பறக்க விட்டிருக்கிறார்கள் என்பது மே 16 இல் தெரிந்துவிடும்.
------------------------------------------------------------------------------------------------
குண்டூர் மிளகாவை அரைத்து கண்ணில் ஊற்றியது போல எரிந்து கொண்டிருக்கிறது மணவாடு தேசம். காங்கிரஸ், தெலுங்குதேசம், பிரஜா ராஜ்யம் என ஆள் ஆளுக்கு ஆந்திராவை ராமகுண்டம் ரேஞ்சுக்கு சூடேற்றிக் கொண்டு இருக்க, பதினாறு வயதில் பாகிஸ்தானை புரட்டி எடுத்த சச்சின் மாதிரி நேற்று முளைத்த லோக் சத்தா ஆந்திர அரசியலை தாறுமாறாக தகர்த்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.. .
கர்நாடகாவிற்கு நிஜமான கேப்டன் என்றால் ஆந்திராவிற்கு நிஜமான டாக்டர் கம் ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் ஜெயபிரகாஷ் நாராயணன். சுருக்கமாக ஜே.பி. லோக் சத்தாவின் காட் பாதர். ஆந்திராவின் அரசியலை மையமாக வைத்து நடந்து கொண்டிருக்கும் இண்டர்நெட் யுத்தத்தில் இன்றைய தேதிக்கு இவரின் லோக் சத்தா கட்சிதான் சூப்பர் டூப்பர் ஹிட். ஈநாடு தெலுங்கு தேசத்திற்கும், சாக்-ஷி காங்கிரசுக்கும், ஆந்திரஜோதி பிரஜா ராஜ்யத்திற்கும் குடை பிடிக்க, ஒட்டுமொத்த தெலுங்கு இண்டர்நெட் உலகமும் லோக் சத்தாவின் பின்னால் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்வது போல தெரிகிறது.
ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து அரசியலுக்கு வந்திருப்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. மக்களின் கேள்விகளுக்கு கதையோ கவிதையோ சொல்லி திசை திருப்பாமல் தெளிவான நடைமுறைக்கு சாத்தியமான பதிலை தருகிறார் மனிதர். ஆந்திராவின் எல்லா தரப்பு மக்களையும் டோலிவுட் ஹீரோயின்களைவிட அதிகமாக கவர்ந்துள்ளார். அத்தனையும் ஒட்டாக மாறும்பட்சத்தில் ஆந்திரா நிஜமாகவே ஒளிருவதற்கு வாய்ப்பு இருநூறு சதவீதம் உள்ளது.
எல்லா கட்சியின் தொண்டரடிபொடிகளும் ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருக்க மனிதர் தனி ஆளாக ஒட்டு மொத்த ஆந்திராவையும் ரயிலில் சென்று கவர் செய்து கொண்டிருக்கிறார். தகுதியான வேட்பாளர்கள் கிடைக்காத காரணத்தால் ஒட்டு மொத்த ஆந்திராவிற்கும் வேட்பாளர்களை நிறுத்த முடியாத நிலையில் இருக்கிறது லோக் சத்தா. யூகித்துக் கொள்ளுங்கள் எந்த மாதிரியான கட்சி என்று. நம்மூரில் ஒரே தொகுதிக்கு ஒரே கட்சியில் முப்பது பேர் வரிசையில் நிற்கிறார்கள். நல்ல கட்சிக்கு வேட்பாளர் பஞ்சம்….தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சினிமா, பணம், ஆள் பலம் என்ற ஆந்திர அரசியலின் எந்த தகுதியும் இல்லாமலே மக்களை சென்றடைந்திருக்கிறார். ஆந்திர மக்களை எழுப்புவதற்காகவோ என்னவோ இவருக்கு விசில் சின்னத்தை கொடுத்திருக்கிறது தேர்தல் கமிஷன். இவர் அடிக்கும் விசில் சத்தத்தில் மக்கள் லேசாக விழித்தாலே போதும், ஹைதராபாத்தில் லோக் சத்தாவின் கொடி உயர பறக்கும். பார்க்கலாம் மே 16 அன்று என்ன நடக்கிறது என்று.

ஒவர் டூ மடிப்பாக்கம்….முன்னவர்கள் இருவரும் சீனியர்கள் வயதிலும் அனுபவத்திலும், இருவருக்குமே ஒரளவு அரசியல் ரீதியான அனுபவம் உள்ளது. இதெல்லாம் ஒரு பெரிய மேட்டரே இல்லை என சொல்லாமல் சொல்லி களத்தில் இறங்கிவிட்டார் சரத்பாபு. அம்மாவும், அய்யாவும், கேப்டனும் தமிழ்நாட்டை கூறு போட்டு பந்தாடிக் கொண்டிருக்க, சத்தமே இல்லாமல் சென்னையின் உஷ்ணத்தை இன்னும் கொஞ்சம் கூட்டி கொண்டிருக்கிறார் சரத். இவரை ஆதரித்தும் எதிர்த்தும் இணையத்தில் எழுதும் அளவிற்கு தென்சென்னையின் முக்கிய வேட்பாளராக விசுவரூபம் எடுத்து இருக்கிறார்.
இவரின் பின்புலம், படிப்பு விவரம் போன்ற இத்யாதிகளை பலரும் துவைத்து காயப்போட்டு விட்டார்கள், விதம் விதமாக அவர் அவருக்கு பிடித்த வகையில். போதாத குறைக்கு பத்திரிகைகளின் அதீதமான எழுத்துக்கள் இவரை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு போய் சேர்த்திருக்கிறது. Indirect Marketing மனிதருக்கு நன்றாகவே வேலை செய்கிறது. இதை கன்சாலிடேட் செய்வாரா என்பதை கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
வேட்டி கட்டிய அரசியல்வாதிகளையே பார்த்து பார்த்து புளித்து போன தமிழக வாக்காள பெருமக்களின் கண்களுக்கு இவரின் தோற்றமே ஒரு மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. ஓட்டு வாங்க இது மட்டுமே போதாது என்று சரத்துக்கு தெரிந்திருக்கும் என்று நம்புவோமாக. மே 16 அன்று முடிவுகள் எப்படி இருந்தாலும் இவர் இழப்பதற்கு ஒன்றும் இல்லை, எதிர்காலத்தில் இன்னொரு சந்தர்ப்பம் வாய்த்தால் இந்த அனுபவத்தை பயன்படுத்தி இன்னும் கொஞ்சம் மேலே போகலாம்.
ஒரு பயலும் சரியில்லை என்ற மனநிலையில் உள்ள தமிழக வாக்காளர்கள் நிஜமாகவே ஒரு மாற்றத்தை விரும்பும் பட்சத்தில் சரத்துக்கு “டெல்லி சலோ” வாய்ப்பு நிஜமாகலாம்.

கோபிநாத், ஜே.பி ஆகியோரின் பரீட்சை முடிந்துவிட்டது…முடிவுக்காக காத்திருக்கிறார்கள்….சரத்துக்கு இனிமேல் தான் பரீட்சையே நடக்கப் போகிறது…….மாற்றத்திற்கு தென்சென்னை மக்கள் தயாரா இல்லையா என்பது மே 16 அன்று தெரிந்துவிடும்.
-------------------------------------------------------------------------------------------------

Monday, May 4, 2009
எழுதுங்கள் படிக்கப்படும்
தனக்கென்று ஒரு தளம் இல்லாமலே இன்றைய தேதிக்கு மிக அதிகமான பாலோயர்களை வைத்திருப்பவர் அனேகமாக திருவள்ளுவராகத் தான் இருப்பார். உயிருடன் இருந்திருந்தால் இந்நேரம் கூகுள் இவரை அள்ளிக்கொண்டு போய் மவுண்டன் வியூவில் வைத்து வழிபட்டிருப்பார்கள். அறம், பொருள், இன்பம், காதல், காமம் , சூது, வாது என எல்லா திசையிலும் புகுந்து விளையாடிய / விளையாடிக் கொண்டிருக்கின்ற எழுத்தின் ஏகபோக முதலாளி. எல்லா வயதினருக்கும் "ஏ"ற்ற படம் என சொல்வது போல், எல்லா வயதினரும் படிக்க தகுதி உடைய படைப்பு இவருடையது, பாலோ செய்வது மட்டும்தான் கொஞ்சம் சிக்கலான விஷயம்.
தலை சிறந்த (!) எழுத்தாளன் என தங்களை கூறிக்கொள்பவர்கள் கூட இதுவரை 1331 வது குறளை ஏதோவொரு பாலில் படைப்பதற்கு முயலாதது ஏன் என தெரியவில்லை. எல்லா சரக்கையும் திருவள்ளுவரே 1330-க்குள் அடக்கிவிட்டாரா அல்லது 1331 வது குறளுக்கு இவர்களிடம் சரக்கு இல்லையா என்பது தெரியவில்லை. மூன்றரை நிமிட பாடலுக்கு நம்மை குத்து போட வைக்கும் அளவிற்கு தமிழை திறமையாக கையாளும் நம்மவர்கள் இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் "குறள் படைத்த குத்துவிளக்கு" என்ற டைட்டில் கார்டு நிச்சயம். இணையத்தில் இருப்பவர்கள் கூட முயற்சிக்கலாம்...இணைய குறலோன் என்ற பட்டம் உங்களுக்கு உறுதி செய்யப்பட வாய்ப்புக்கள் அதிகம். ஒரே சிக்கல் சில்லரை தேற்ற முடியாது.
எத்தனை பேர் படிப்பார்கள், எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்படும், எவ்வளவு காலத்திற்கு நிலைத்து நிற்கும் என எந்த ஒரு சிந்தனையும் திருவள்ளுவருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. நினைத்ததை செதுக்கிவிட்டு போய் இருக்கிறார் மனிதர் அஷ்டே. நம்மவர்கள் புதிது புதிதாக அதற்கு உரை போட்டு நாக்கில் நுரை தள்ள வைக்கிறார்கள்.
சிக்கலான புரோகிராம் ரேஞ்சில் எழுதி சின்னாபின்னம் ஆகாமல், ஜஸ்ட் ஒன்றரை வரியில் மேட்டரை அடக்கி வைத்துவிட்டு சென்றிருப்பது எப்போது நினைத்தாலும் ஆச்சரியத்தை உண்டு பண்ணுகிறது. Keep It Short & Simple” (KISS), ஏசி ஹாலில் நமக்கு சொல்லி கொடுக்கும் பாடத்தை, ரொம்ப சாதரணமாக செயல்முறை படுத்தி விட்டு போய் அமைதியாக கன்னியாக்குமரி கடலில் நின்றுவிட்டார். அமைதியாக நிற்பவரை இன்னமும் படகில் ஏறி சென்று தொந்தரவு செய்கிறோம்.
இவ்வளவு பெரிய படைப்பை படைத்துவிட்டு மனிதர் எந்தவொரு ரைட்ஸும் வாங்காமல் போயிருக்கிறார். இந்த பதிவையே காப்புரிமை செய்யலாமா என நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். J. இணையத்தில் இப்போது இதுதான் பேஷன்.
சுயமாகவும் சிக்கனமாகவும் தான் சொல்ல வந்ததை எளிமையாக எழுதும் பட்சத்தில் எழுத்துக்கள் காலத்தை கடந்து நிற்கின்றன..எழுதுங்கள் உங்கள் எழுத்துக்களும் படிக்கப்படும். காலம் கடந்த பின்னும்.

Subscribe to:
Posts (Atom)