ஸ்லோவாக்கியன்ஸ் யாரிடமாவது அவர்கள் உச்சரிக்க விரும்பாத பெயர் என்னவென்று கேட்டுப்பாருங்கள்…சந்தேகமேயில்லாமல் வின்ஸ்டன் ரீட் என்பார்கள். இதுநாள் வரை கிரிக்கெட்டில் மட்டும்தான் நியுசிகாரர்கள் ஸ்லோ பிக்கப் என நினைத்திருந்தேன்….கால்பந்திலும் அப்படித்தான் போலத்தெரிகிறது. ஸ்லோவாக்கியாவிற்கு எதிரான போட்டியில் மிகவும் மந்தமாக ஆடத்தொடங்கி ஆட்டத்தின் இறுதி நொடிகளில் அற்புதமாக ஒரு கோலை போட்டு போட்டியை சமன் செய்ததோடு மட்டுமல்லாமல், ஏறக்குறைய வென்றுவிட்டோம் என மதப்பில் இருந்த ஸ்லோவாக்கியன் அணிக்கு ஷாக் கொடுத்துவிட்டார்கள் நியுசிக்காரர்கள்.
நேர்த்தியான அந்த கோலை அடித்து “கிவி” தேசத்து மக்களை திக்குமுக்காடச் செய்துவிட்டார் வின்ஸ்டன் ரீட். ஆக்லாந்திலும், கிறைஸ்ட்சர்ச்சிலும் ஆட்டம் காலி என முடிவு செய்து அடித்து முடித்த பாதி பட்வைசர் பாட்டிலுடன் வீட்டுக்கு கிளம்ப தயாராக இருந்த அத்தனை நியுசிக்காரர்களும் மீண்டும் ஒருமுறை வின்ஸ்டன் பெயரைச் சொல்லி நிச்சயமாக மலையேறி இருப்பார்கள்.
சோம்பலாக ஆரம்பித்த போட்டி ஸ்லோவாக்கிய அணியின் முதல் கோலால் கொஞ்சம் சுவாரசியமாக மாறியது. ஆட்டத்தின் இரண்டாவது பாதி முழு நேரமும் முடிந்த நிலையில் கோல் எதுவும் போட்டிராத நியுசிகாரர்கள், ஆட்டத்தில் கூடுதல் நேரத்தில் யாருமே எதிர்பார்க்காதவண்ணம் அந்த இறுதி கோலை அடித்து ஸ்லோவாக்கிய அணியின் வெற்றிக்கனவை தகர்த்துவிட்டார்கள்.
எதிரணியின் கனவைத் தகர்த்த வின்ஸ்டன் ரீட் அநேகமாக சல்மான்கான் அல்லது சவுரவ் கங்குலியின் பரம விசிறியாக இருப்பார்/இருந்திருப்பார் போல தெரிகிறது. தனது கன்னிமுயற்சி கோலாக மாறிவிட்ட சந்தோஷத்தில் மனிதர் தனது சட்டையை கழற்றி சுற்றிக்கொண்டே ஒடி வந்ததை நியுசியில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த யுவதிகள் ரசித்திருக்கலாம் ஆனால் ஆட்ட நடுவர் ரசிக்கவில்லை….மஞ்சள் அட்டையை கையில் எடுத்துவிட்டார். என்ன கொடுமை சார் இது…இதுமாதிரியான பெரிய போட்டிகளில் இம்மாதிரியான கொண்டாட்ட நிகழ்வுகளை கூட அனுமதிக்காமல் விளையாட்டு போட்டியை மிலிட்டரி பரேட் மாதிரி மாற்றுவது ஏன் என்றே தெரியவில்லை.
நல்ல வேளை கிரிக்கெட் போட்டிகளில் இம்மாதிரியான விதி ஏதும் இருப்பதாக தெரியவில்லை. இருந்திருந்தால் லண்டன் லார்ட்ஸில் நடந்த போட்டியின் போது ஒன்றாம் வகுப்பு பையன் மாதிரி சட்டையை கழற்றி தலைக்கு மேலே சுற்றியபடி ஓடிவந்த அண்ணன் கங்குலியை இந்நேரம் கட்டம் கட்டி இருப்பார்கள்…தப்பியது பெங்கால் டைகர்
Tuesday, June 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
வெல்கம் பேக் டு பெவிலியன் ஆப்ட்டர் லாங் டைம் :))
அந்த மஞ்சள் கார்டை நீட்டியதும் இது என்ன மிலிட்டிரி பேரேடான்னு நானும் நினைச்சேன்ணா!
Post a Comment