Wednesday, June 23, 2010

தேநீர் கடை -- Creative Thinking

ஒருமுறை திருச்சி நகரையொட்டிய பகுதியில் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது தற்செயலாக வித்தியாசமான பெயர் பலகை கொண்ட தேநீர் கடை ஒன்று கண்ணில் பட்டது. கடையின் பெயர் “ஆத்திக்குடி”.

ராமு டீ ஸ்டால், பாம்பே டீ ஸ்டால் என ஒரே மாதிரியான பெயர்களை மட்டுமே பார்த்து பழகிவிட்டிருந்த நிலையில் இந்த வித்தியாசமான பெயர் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. பல வருடங்கள் கழிந்த பின்னும் இன்னமும் ஒவ்வொரு முறை தேநீர் கடைகளை பார்க்கும் போதெல்லாம் கடைகளின் பெயர் பலகை மீது கண்கள் படிவதையும், “ஆத்திக்குடி” போன்ற வித்தியாசமான பெயரை காண முடியுமா என்ற ஏக்கம் தலையெடுப்பதையும் தவிர்க்க முடியவில்லை. சில வருடங்களுக்கு முன் விளம்பரத் துறையில் வேலை செய்பவர்களுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தபோது இம்மாதிரியான மனதில் பதிந்து விடக்கூடிய ஒன் லைனர் கான்செப்ட்டுக்காக அவர்கள் எத்தனை தூரம் மெனக்கெடுகிறார்கள் என்பதை நேரடியாக பார்க்க முடிந்தது.

இம்மாதிரி வித்தியாசமாக சிந்திப்பவர்கள் ஆதிகாலத்திலிருந்தே இருந்திருக்கிறார்கள் போல தெரிகிறது. சங்கத் தமிழ் இலக்கிய படைப்பாளிகளில் Out-of-Box thin-king குரு அநேகமாக திருவள்ளுவராக தான் இருந்திருக்ககூடும். திருக்குறளை இரண்டிக்குள் சுருக்காமல் பிற இலக்கியங்களை போல பத்தியாகவோ அல்லது வேறு வடிவிலோ படைத்திருந்தால் இத்தனை தூரம் திருக்குறள் பேசப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. எழுதுவது என முடிவு செய்தபின் அதை கொஞ்சம் க்ரியேட்டிவிட்டியுடன் செய்யலாம் என யோசித்து அதன் பின்னரே அந்த இரண்டடி கான்செப்டை கையில் எடுத்திருப்பாரோ எனத் தோன்றுகிறது.

Creative Thinking, Out-of-Box Thinking போன்ற சமாச்சாரங்களுக்காகவே பணத்தை கொட்டி கொடுத்து ஐ.ஐ.எம்மிலிருந்தும் ஜமன்லால் பஜாஜ் இன்ஸ்ட்யூடிலிருந்தும் ஆட்களை அள்ளிக் கொண்டு வரும் பல நிறுவனங்களை அருகிலிருந்து பார்த்ததுண்டு. நம்மூரில் இதே மேட்டரை ரொம்ப மெனக்கெடாமல் அதிக செலவில்லாமல் இந்த தேநீர் கடைக்காரரை போல ஜஸ்ட் லைக் தட் என செய்துவிட்டுப் போகிறார்கள்.

தேநீர் கடைக்காரருக்கு ஒன் லைனர் என்றால் நம்மூர் ஆட்டோக்களில் இரண்டு வரியில் அசால்டாக மெஸேஜ் எழுதி சில நேரங்களில் புருவத்தை உயர செய்துவிடுகிறார்கள். டீ-ஷர்ட்களில் ப்ரிண்ட் செய்வதற்காக மெஸேஜ் தேடிக்கொண்டிருப்பவர்கள் நம்மூர் ஆட்டோக்கள் பின்னால் இரண்டு நாள் சுற்றினால் போதும்…அடுத்த இரண்டு வருடத்துக்கு யோசிக்கவே தேவையில்லாத அளவிற்கு கான்செப்ட் கிடைத்துவிடும்.

அடுத்தமுறை பஸ்ஸில் பயணம் செய்யும்போதோ அல்லது ஆட்டோக்களின் பின்னால் செல்லும்போதே கண்ணை அகலமாக திறந்து வைத்திருங்கள்..வித்தியாசமான பெயரோ அல்லது வாசகமோ உங்களை ஆச்சரியப்படுத்த காத்திருக்கலாம்.

3 comments:

துளசி கோபால் said...

உண்மை.

முயலும் வெல்லலாம்

ஆமையும் வெல்லலாம்

ஆனால்

'முயலாமை' வெல்லாது.

பழமுதிர்ச்சோலை என்ற காய்கறிக்கடையில் கண்டது!!!

எம்.எம்.அப்துல்லா said...

தலைவரே அது ஆத்திகுடி அல்ல ஆதிகுடி.

அந்தக் கடை இப்ராஹிம் பார்க் (alis) ஜாபர்ஷா தெரு பஸ் ஸ்டாப் அருகில் இருக்கு. அதில் இருந்து நாலாவது பில்டிங்கில் இருக்கும் ஒரு லாட்ஜில் தங்கிதான் திருச்சியில் யூ.ஜி. முடிச்சேன்.

எம்.எம்.அப்துல்லா said...

தலைவரே அது ஆத்திகுடி அல்ல ஆதிகுடி.

அந்தக் கடை இப்ராஹிம் பார்க் (alis) ஜாபர்ஷா தெரு பஸ் ஸ்டாப் அருகில் இருக்கு. அதில் இருந்து நாலாவது பில்டிங்கில் இருக்கும் ஒரு லாட்ஜில் தங்கிதான் திருச்சியில் யூ.ஜி. முடிச்சேன்.