Sunday, December 26, 2010

Bits & Bytes

தமிழகத்தில் ஒரு பேருந்து ஓட்டுநருக்கு இருக்கும் செல்வாக்கு கூட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு இல்லாமல் இருப்பது காலத்தின் கோலம். சில நாட்களுக்கு முன்னதாக ஏதோ ஒரு அரசு விழாவில் பங்கேற்பதற்காக வந்து கொண்டிருந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவரை வழிமறித்து , போஸ்டரில் தங்கள் கட்சியினரின் பேரை ஏன் போடவில்லை எனக் கேட்டு காங்கிரஸ் பேரியக்கத்தின் தொண்டராழ்வார்கள் கோதாவில் இறங்கியிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் போஸ்டர் அடிப்பதற்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியவில்லை. மாவட்ட ஆட்சித்தலைவருடன் மோதலில் ஈடுபட்ட சில பல பெயர்களையும் அவர்களின் கட்சிப் பதவி டைட்டிலையும் (!) படித்தபோது இவர்களில் யாருக்காவது குறைந்தபட்சம் IAS என்பதற்கு Expanded Meaning தெரிந்திருக்குமா என்ற சந்தேகம் வலுத்துவிட்டது. போதாத குறைக்கு யாரோ ஒரு கதர்வேட்டி மைனர் ஆட்சித்தலைவரை உடனடியாக மாற்றவேண்டும் என குரலை உயர்த்தியிருக்கிறார். அண்ணே இது வட்டச் செயலாளர் பதவி இல்லைன்னே. உயிரை கொடுத்து படிச்சாதான் Preliminary Exam-யையே Clear பண்ண முடியும். ஆட்சித்தலைவர் பதவியெல்லாம் வேட்டிய மாத்திக் கட்டிக்கிட்டா உடனே கொடுக்குற பதவி இல்லைங்கன்னா. அதுக்கெல்லாம் நிறைய உழைக்கனும். காமராஜர் ஆட்சியெல்லாம் அமைக்க போறதா அடிக்கடி ஏதோ சொல்லுறீங்க, அவரு ஆட்சியில் அதிகாரிகள எவ்வளவு கண்ணியத்தோட நடத்துனாருன்னு கொஞ்சம் பழைய பேப்பரையெல்லாம் படிச்சு தெரிஞ்சுகிட்டிங்கின்னா நல்லது. நீங்க ஆட்சித்தலைவரை வழிமறிச்சு கோதாவுல இறங்குனா கலவரத்த கட்டுப்படுத்த அவருக்கு முழு அதிகாரமும் இருக்குங்குற Basic Knowledge-யாவது யாராவது படிச்ச புள்ளகிட்ட கேட்டு தெரிஞ்சிகிடுங்கன்னா. துப்பாக்கி சூட்டில் தொடங்கி ஊரடங்கு உத்தரவு வரை எல்லாமே ஆட்சித்தலைவரின் அதிகாரத்திற்குட்பட்டது என்ற மினிமம் அறிவையாவது இனிமேல் கொஞ்சம் டெவலப் பண்ணிக்கோங்கன்னா, இல்லைன்னா சில்லரை/பிரியாணி/டாஸ்மாக் வஸ்து என எதைக் கொடுத்தாலும் ஓட்டு போடுறதுக்கு மக்கள் நிறையவே யோசிப்பாங்க……யாரோட கவனத்தையோ கவர்வதற்காக நீங்கள் போடும் இந்த சில்லி ஆட்டத்தையெல்லாம் மக்களோடு சேர்ந்து அந்த அருணாச்சலேஸ்வரரும் பார்த்துக்கிட்டு இருக்காரு….கொஞ்சம் பார்த்து நடந்துக்குங்க தலைவா…..தேர்தல் வேற நெருங்கிகிட்டே இருக்கு :-)
----------------------------------------------------------------------------------

Social Responsibility இந்த வார்த்தையை தமிழ்நாட்டில் இருக்கின்ற அத்தனை பேரையும் தினமும் நூறு முறை எழுத சொல்லி ஆர்டர் போட்டே ஆகவேண்டும். குறிப்பாக பெரிய நகரங்களில் வசிக்கும் படித்தவர்களுக்கு இதை கட்டாயமாக்கியே தீரவேண்டும். ஒவ்வொரு முறை தண்ணீர் பிரச்சனை தலையெடுக்கும்போதும் பழியை இயற்கையின் மீதும் ஆள்பவர்களின் மீதும் (தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மழையே வாராது போன்ற டுபாக்கூர் பிரச்சாரங்கள்) போட்டுவிட்டு தப்பித்துக்கொள்ளும் நம்மவர்கள், மூன்று வாரங்களுக்கு மேலாக கொட்டித்தீர்த்த மழை நீரை சேகரிப்பதற்கு எத்தனை தூரம் மெனக்கெட்டார்கள் என்று தெரியவில்லை. மழை நீரை சேகரித்து நிலத்தடி நீரை உயர்த்தவேண்டும் என்பதை சொல்வதற்கு ஜெயலலிதாவோ, கருணாநிதியோ தேவை இல்லை. கொஞ்சம் Common Sense இருந்தால் போதும். கிடைக்கும் மழைநீரை எல்லாம் சேமிக்காமல் அலட்சியம் செய்துவிட்டு ஆறுமாதம் கழித்து ஒப்பாரி வைப்பது என்பது ஏறக்குறைய Routine Procedure ஆகவே மாறிவிட்டது. முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகளில் உடன்பாடு இல்லாவிட்டாலும் மழைநீர் சேகரிப்பை மிகவும் Aggressive ஆக அவர்களின் அரசாங்கம் செயல்படுத்திய விதம் கட்சி பேதமின்றி பாரட்டுக்குறிய விஷயம். எல்லா வீடுகளிலும் கட்டாயப்படுத்தி இதை செய்ய வைத்ததற்காகவே எழுந்து நின்று கை தட்டலாம். இன்னொருபுறம் மழைநீர் சேகரிப்பு என்ற அடிப்படை விஷயத்தைக்கூட அரசாங்கம் கட்டாயபடுத்திய பின்னரே செய்வேன் என மக்கள் அடம்பிடிப்பது மிகவும் மோசமான Democracy. இருபதாம் நூற்றாண்டின் விதியை தீர்மானித்தது பெட்ரோல். இருபத்தொன்றாவது நூற்றாண்டை தீர்மானிக்கப்போவது யுரேனியமோ அல்லது புளுட்டோனியமோ அல்ல..நம்ம உபேந்திராவின் H2O தான். சீக்கிரமாக விழித்துக்கொண்டால் அடுத்த தலைமுறைக்கு கொஞ்சம் நல்ல குடிநீரை வழங்கமுடியும்..இல்லையென்றால் அடிதடி நிச்சயம்.
----------------------------------------------------------------------------------

சென்ற முறை ஊருக்கு சென்றிருந்த போது சில இடங்களில் கீழே உள்ள வாசகத்தை காண முடிந்தது. “இந்த கட்டிடம் ---------- தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.------------------MLA அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டது”. அந்த கட்டிடங்களை கட்டுவதற்காக செலவான தொகையையும் குறிப்பிட்டிருந்தார்கள். கட்டப்பட்டிருந்த கட்டடத்தையும் தொகையையும் பார்த்தபோது எனது காதை நானே ஒரு முறை தடவி பார்த்து சமாதானம் அடைந்துக்கொண்டேன். அடிப்படையில் சட்டமன்ற / பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மக்களின் வரிப்பணத்திலிருந்தே வழங்கப்படுகிறது. விஷயம் இப்படியிருக்க, தொகுதி உறுப்பினர் ஏதோ தனது பாக்கெட்டில் இருந்து எடுத்து செலவழித்தது போல மார்க்கெட்டிங் செய்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் மக்கள் வரி பணத்தைக் கொண்டு செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிவிப்பு பலகைகளில் மிகவும் தெளிவாக குறிப்பிட்டிருப்பார்கள், “இந்த பணிகள் அனைத்தும் உங்கள் வரிப்பணத்தில் இருந்தே செயல்படுத்தப்படுகின்றன” என பட்டவர்த்தனமாக எழுதி வைத்து விட்டுதான் கையில் மண்வெட்டியையே எடுப்பார்கள். நம்மூரிலும் இப்படி செய்தால், நேர்மையாக வரி கட்டும் மக்கள் கொஞ்சம் சந்தோஷப்படுவார்கள். கூடுதல் பொறுப்புணர்வோடு நடந்துக்கொள்வார்கள். எல்லாவற்றையும் அரசாங்கமே செய்கிறது என்ற மாயையை உருவாக்கிவிட்டதால்தான் சாமான்ய மனிதன் எந்த அக்கறையும் இல்லாமல் நடந்துக்கொள்கிறான். இனிமேலாவது நம்மூரில் இம்மாதிரியான போர்டுகள் வைக்கும்போது மக்களின் Contribution-ஐ முன்னிலைப்படுத்தினால் நாடு கொஞ்சம் செழிக்கும். தஞ்சாவூரில் நஞ்சையும் புஞ்ஜையும் நாலு போகம் நல்லபடியாக விளையும்.
----------------------------------------------------------------------------------

நீண்ட நாட்களாக குடைந்துக்கொண்டிருக்கும் கேள்வி…இதுவரை இந்தியாவில் நடைபெற்ற ஊழல் வழக்குகளில், இழந்த பணத்தில் அட்லீஸ்ட் 5% Recover செய்யப்பட்டிருக்கிறதா என்று…..தனியார் நிறுவனங்களிலும் அரசாங்களிலும் பணிபுரியும் ஊழியர்களிடம் சம்பளத்தை தருவதற்கு முன்பாகவே வரியை வசூல் செய்யும் நேர்மை தவறாத அரசுகள், இதுவரை எத்தனை ஊழல்களில் பணத்தை திரும்ப வசூல் செய்து அரசு Treasury இல் சேர்த்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. யாராவது விஷயம் தெரிந்த புண்ணியவான் RTI போட்டால் மக்களுக்கு கொஞ்சம் குழப்பம் தீரும். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு ஊழல் நடைபெறும் போது அரசாங்கத்தின் அத்தனை இயந்திரமும் முடுக்கி விடப்பட்டு விசாரணைக்காக மட்டுமே கோடிகளில் செலவழிப்பது என்பது Fashion ஆக மாறிவிட்டது. End Result மட்டும் இதுவரை மக்கள் முன் வைக்கப்படாமல் இருப்பது அரசாங்களுக்கு Shame, Shame, Puppy, Shame. All the Monkeys know your name. ஊழல் பணத்தில் ஒரு நையா பைசாவை கூட மீட்டுக்கொண்டு வரமுடியவில்லை என்றால் அதற்கெதற்கு இத்தனை பில்டப் கொடுக்கிறார்கள் என்றேத் தெரியவில்லை. பார்லிமெண்ட் கேண்டினில் Subsidy Rate இல் கிடைக்கும் பஜ்ஜியை சாப்பிட்டு விட்டு தூங்கிவழியும் மக்கள் பிரதிநிதிகள் ஊழல் என யாரோ கூவியவுடன் பார்லிமெண்டிற்கே வாராமல் கட் அடித்துவிட்டு வெளியில் நின்று கொஞ்சநேரம் கூவிவிட்டு சிக்கன் பிரியாணி சாப்பிட வீட்டிற்கு சென்றுவிட்டார்கள். பதினாலு வருஷத்துக்கு முன்னால் சுக்ராம் a.k.a பண்டிட்ஜி என்ற தில்லாலங்கடி மினிஸ்டர் DoT-ஐ ஆல்மோஸ்ட் ஊத்தி மூடிவிடும் அளவிற்கு ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைதெல்லாம் செய்யப்பட்டார். ஜெயிலில் இருந்தபடியே தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றார். போன வருடம் வெறும் இரண்டு லட்ச ரூபாய் அபராதத்துடன் கேஸை ஊத்தி மூடி பைலை தூக்கி பரண்மேல் போட்டுவிட்டார்கள். போபர்ஸ், பங்குச்சந்தை, தெஹல்கா டீம் வெளியே கொண்டுவந்த பாதுகாப்பு துறை ஊழல் என எல்லாவற்றையும் அமுக்கியபின் இன்னமும் ஊழலைப்பற்றி விசாரிப்பதாக மக்களை எத்தனை காலம் ஏமாற்றப்போகிறார்கள் என்று தெரியவில்லை. தேர்தல் நேர பேரத்திற்காகவும், தங்கள் பங்கு சரியாக வந்து சேராத காரணத்திற்காகவும் கத்தரிக்காயை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து Mr. பொதுஜனத்தை ஏன் நோகடிக்கிறார்கள் என்றேத் தெரியவில்லை.

9 comments:

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே, ஐ.ஏ.எஸ் அதிகாரி ஐ.ஏ.எஸ் அதிகாரியா நடந்துக்கணும். இதே ராதாகிருஷ்ணனையோ,ஸ்வரன்சிங்கையோ,ராமசுந்தரத்தையோ எந்தக் கட்சிக்காரனாவது இப்படி செய்ய நினைப்பானா??

நான் விசாரித்தவரை இந்தக் கலெக்ட்டர் அரசியல்வாதிகளின் வேலைகளில் தலையிடுகின்றார். அதாவது ஒரு பஞ்சாயத்தில் ஏதேனும் கட்டிடம் கட்டினால் அந்தப் பஞ்சாயத்து இருக்கும் யூனியனின் சேர்மனோ,பகுதி ச.ம.உறுப்பினரோ அல்லது பா.ம உறுப்பினரோ திறப்பது மரபு.ஆனால் இவர் பி.டி.ஓ களின் மூலம் நடத்தி இவரே திறந்து வைக்கிறாராம். கீழ் அதிகாரிகளின் மூலம் வரும் போது தனக்கு போஸ்டர் அடித்து ஒட்டுவது போன்ற பல வேலைகளை இவர் அரசியல்வாதிபோல் செய்வதால் அரசியல்வாதிகள் இவரை தங்களில் ஒருவராக நினைத்து மல்லுக்கட்டுகின்றனர்.இதுதான் என் தொடர்புகளின் மூலம் நான் விசாரித்து அறிந்தது.

இராகவன் நைஜிரியா said...

// நீண்ட நாட்களாக குடைந்துக்கொண்டிருக்கும் கேள்வி…இதுவரை இந்தியாவில் நடைபெற்ற ஊழல் வழக்குகளில், இழந்த பணத்தில் அட்லீஸ்ட் 5% Recover செய்யப்பட்டிருக்கிறதா என்று //

ஹி... மில்லியன் டாலர் கேள்வி. யாருக்குமே விடை தெரியாத கேள்வி.

இராகவன் நைஜிரியா said...

// மூன்று வாரங்களுக்கு மேலாக கொட்டித்தீர்த்த மழை நீரை சேகரிப்பதற்கு எத்தனை தூரம் மெனக்கெட்டார்கள் என்று தெரியவில்லை. //

முக்கால்வாசி ஏரியெல்லாம் வீடுகளாக ஆகிவிட்டது. மீதி இருக்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரும் வழிகள் அடைக்கப் பட்டு இருக்கின்றன.

சில இடங்களில், ஏரிகள் கழிவு நீர் குட்டைகளாக மாறிவிட்டன.

இதில் மழை நீர் சேகரிப்பு எங்கிருந்து நடப்பது நண்பரே?

இராகவன் நைஜிரியா said...

// சீக்கிரமாக விழித்துக்கொண்டால் அடுத்த தலைமுறைக்கு கொஞ்சம் நல்ல குடிநீரை வழங்கமுடியும்..இல்லையென்றால் அடிதடி நிச்சயம். //

சர்வ நிச்சயம்.

இராகவன் நைஜிரியா said...

இந்த வலைப்பூவை எனக்கு அறிமுகப் படுத்திய நண்பர் திரு. புதுகை அப்துல்லா அவர்களுக்கு நன்றி.

அருமையா எழுதிறீங்க... வாழ்த்துகள்.

Rex said...

MMA : நீங்கள் விசாரித்து அறிந்தது போல நடந்திருந்தால் அவர் தன்னை மாற்றிக்கொண்டு அரசியல்வாதிகளை தவிர்த்து மக்கள் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. மற்றபடி, நீங்கள் கேள்விபட்டதுபோல நடந்திருந்தால் இந்நேரம் ஆளும்கட்சிக்காரர்களே இவரை அந்த பதவியில் விட்டுவைத்திருக்கமாட்டர்கள், ஏனென்றால் தி.மலையில் இருந்து திமுகவினரும் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். மற்றபடி இந்த நிகழ்வை நான் எழுதக் காரணம் அந்த பதவியின் மீது எனக்குள்ள மரியாதையும், நம்பிக்கையும் மட்டுமே.

Rex said...

இராகவன், ஏரிகளை கழிவுநீர் குட்டைகளாக மாற்றியது நாம்தானே. அட்லீஸ்ட் மீதமிருக்கும் நீர் நிலைகளையாவது சரியாக பராமரித்து மழைநீரை சேமிக்க தொடங்கினாலே போதும்..ஓரளவிற்கு நிலத்தடி நீரை உயர்த்திவிடலாம்...நான் பார்த்தவரையில் சில வீடுகளில் மழைநீர் சேகரிப்பிற்காக அதிகமாக மெனக்கெடுகிறார்கள்..ஆனால் மெஜாரிட்டி மக்கள் இதை ஏதோ தேவையற்ற வேலை என நினைப்பதாகவே தெரிகிறது. அந்த நிலை மாறினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். நன்றி.

Toto said...

Rex..அருமையான‌ அல‌ச‌ல். தொட‌ர்ந்து எழுதுங்க‌..

-Toto

Rex said...

Toto - Thnx