Thursday, March 8, 2012

ஓவர் டூ டெல்லி

ஒரு வழியா ஐந்து மாநில தேர்தல் முடிஞ்சு ரிசல்ட்டும் வந்துடுச்சு. கவுண்டிங் எட்டு மணிக்கு தொடங்கினாலும் நம்ம மீடியாக்கார அண்ணாச்சிக சரியா ஏழு முப்பது மணிக்கே கடைய திறந்துட்டாங்க. தேர்தல் முடிவு எப்படி இருக்கும்னு அலசி ஆராய்ந்து காயப்ப்போட வழக்கம்போல ஊர்ல இருக்குற போணியாகாத வட்ட செயலாளர் வண்டு முருகன் மாதிரி ஆளுகள கொண்டு வந்து டீயும், பிஸ்கெட்டும் கொடுத்து கேமிரா முன்னால உட்கார வச்சிட்டு முதல் பெட்டிய திறக்கற வரைக்கும் நர்சரி ஸ்கூல் பாப்பா மாதிரி அமைதியா இருந்த காட்சி கண்கொள்ளாதது.

நம்ம ஊர்ல முன்னாடி எல்லாம் முதல்ல தபால் ஒட்டுன்னு ஒரு வஸ்துவ எண்ணி பர்ஸ்ட் ரவுண்ட் ரிசல்ட்டுன்னு நியுஸ வெளியவிடுவாங்க…அத அப்படியே மாலைமுரசு மாதிரியான மசாலா ஆளுங்க, ஆளுங்கட்சி முண்ணனி அப்படின்னு பில்டப் கொடுத்து பேப்பர வித்து காசு பண்ணிடுவாங்க…வந்த ஐம்பது தபால் ஒட்டுல யாரு முண்ணணியில இருந்தா என்ன, இல்லைன்னா என்ன….முழுசா எண்ணி முடிக்கும்போது இப்படி பில்டப் கொடுத்த ஆளுங்க பலபேர் டெபாசிட் எகிறி வேஷ்டி அவுந்து நிக்குறத எல்லாம் பல சமயம் பார்த்ததுண்டு…….சரி துண்டு பேப்பர மடிச்சு ஓட்டுப் போட்ட காலம் போய் பட்டன் ப்ரஸ் பண்ற அளவுக்கு முன்னேறிவிட்ட பிறகாவது கொஞ்சம் மாறியிருப்பாங்கண்னு பார்த்தா….ம்ம்ம்ம்ம்….நோ வே….நம்மூர் மீடியா தான் இப்படின்னு பார்த்தா, அந்த பக்கம் அண்ணன் ப்ரணாய் ராய் & கோ அதவிட படுமோசமா இருக்காங்க…உ.பி. ரிசல்ட் வெளிவர ஆரம்பித்த அடுத்த அரைமணி நேரத்துல இவங்க போட்ட சத்தத்துல காது ஜவ்வு கிழிஞ்சுடும் போல இருந்தது…முடியலடா சாமி….

மாயவதி மேல செம காண்டு போல இவங்களுக்கு, அந்த அக்காவ போட்டு ஒரேடியா தாக்கிகிட்டு இருந்தாங்க…நாலவது இடந்தான் அவங்களுக்கு என கற்பூரம் அடிக்காத குறையா சத்தியம் பண்ணிகிட்டு இருந்தாரு அந்த கூட்டத்துல ஒருத்தரு....மொத்தமே பத்து தொகுதியோட முண்ணனி தான் அப்ப ஓடிகிட்டு இருந்துச்சு……போதாத குறைக்கு அப்பப்ப சைக்கிள் கேப்ல பிஜேபி இரண்டாவது இடத்துக்கு வந்துடும்னு சொல்லி அந்த கட்சி ஆளு ஒருத்தர கொண்டு வந்து கேமிரா முன்னாடி நிறுத்தி காமெடி பண்ணிட்டாங்க…பாவம் அவரு தூக்க கலக்கத்துல எல்லா பெருமையும் எங்க தலைவருக்கேன்னு பொத்தாம் பொதுவா பேசி வச்சிட்டாரு…..மொத்த ரிசல்ட் வந்த பிறகு தான் புரிந்தது ஏன் அவரு அப்படி பேசினாருன்னு…கொஞ்சம் விவரமான ஆளுதான் அண்ணன்.

ஒரு வழியா முன்னூறு தொகுதியோட முண்ணனி வெளியான உடனே தெரிஞ்சு போச்சு, அண்ணாச்சி அகிலேஷ் பார்மூலா ஒர்க் அவுட் ஆயிடுச்சுன்னு, சமாஜ்வாடி பார்ட்டி 180+ முண்ணணிக்கு வந்த பிறகும் உ.பி.காங்கிரஸ் வாலா ஒருத்தர கூட்டி வந்து கேமிரா முன்னாடி நிறுத்தி நீங்க இவங்களுக்கு ஆதரவு கொடுப்பிங்களான்னு லூசுத்தனமா கேள்வி கேட்டுகிட்டு இருந்தாங்கப்பா….ஆனா அந்த காங்கிரஸ்கார அண்ணன் ரொம்ப நல்லவரு….எத கேட்டாலும் ஹைகாமண்ட் தான் முடிவு பண்ணும் அப்படின்னு கீறல் விழுந்த ரிக்கார்டு மாதிரி எல்லா கேள்விக்கும் இதையே பதிலா சொல்லிக்கிட்டு இருந்தாரு…..யோவ் உன்னோட மாநிலத்துல கட்சி என்ன பண்ணனும் நீ தான்யா மேலிடத்துக்கு சொல்லனும்…அவங்களே எல்லா முடிவும் எடுத்தா அப்புறம் நீங்க எதுக்கு மாநிலத்துல தலைவரா இருக்கீங்க….அது சரி..வாங்குற முப்பது சீட்டுக்கு யாரு முடிவு பண்ணா என்ன….இப்படியே போனா எல்லா மாநிலத்துலயும் கூடிய சீக்கிரம் பொட்டிய கட்டிட்டு கிளம்புங்கப்பான்னு சொல்லிட போறாங்க நம்ம மக்கள். இதுக்கு பிஜேபி கொஞ்சம் பெட்டர், யாருக்கும் ஆதரவு இல்ல…எங்களுக்கு மெஜாரிட்டி கிடைச்சா பார்த்துகலாம்னு நேராவே சொல்லிட்டாங்க. முடிவு இப்படிதான் இருக்கும்னு திடமா நம்பிட்டாங்க போல தெரியுது...நம்பிக்கை வீண்போகல :-)

நல்ல வேளை கடைசியா சமாஜ்வாடி கட்சி தனியாவே மெஜாரிட்டிய தேத்திட்டாங்க..இல்லைன்னா இந்த மீடியா ஆளுங்க நாங்க அப்பவே சொன்னோம்னு சந்துல சிந்து பாடி இருப்பாங்க…ஏறக்குறைய இதேதான் பஞ்சாப் முடிவுலயும் நடந்துச்சு…அங்க இருபது தொகுதியோட நிலவரம் தெரியும்போதே ஒரு அவரச குடுக்கை அடுத்த காங்கிரஸ் முதல்வர் யாருன்னு பேச ஆரம்பிச்சுடுச்சு…பொழுது விடிஞ்சு பார்த்தா அகாலி ஆளுங்க எல்லோரையும் காலி பண்ணிட்டு சிரிச்சிக்கிட்டு நிக்குறாங்க...கடைசி ஓட்டு எண்ணி முடிக்குற வரைக்கும் காத்திருக்கலைன்னாலும் அட்லீஸ்ட் ஒரு 75% முடியுறவரைக்கும் காத்திருந்து முடிவு பத்தி பேசுனா ஒரு அர்த்தம் இருக்கும்….அத விட்டுட்டு பத்து ஓட்டு எண்ணி முடிச்சவுடனே தைய்ய தக்கான்னு எதுக்கு இப்படி குதிச்சு ரகளை பண்ணுறாங்கண்னு தெரியுல…சின்னப்புள்ளைத்தனமா இருக்கு….தேர்தல்ல ஜெயிக்குறவன் தோக்குறவன விட இவங்க கொஞ்சம் emotional ஆயிடுறாங்க…ஏன்னு தெரியல...

இன்னமும் எந்த முதல்வரும் பதவியேற்காத நிலையில் இப்பவே பார்லிமெண்ட் எலக்ஷென் பத்தி கோதவுல குதிச்சிட்டாங்க…ஒரு பக்கம் காங்கிரஸ் உள்குத்து சத்தம் அதிகமாயிடுச்சு..இன்னொரு பக்கம் அன்னா ஹசாரே மாதிரி ஆளுக எங்களாலதான் காங்கிரஸ் தோத்துடுச்சுன்னு அடிச்சு விட ஆரம்பிச்சுட்டாங்க….இன்னும் சில நாட்கள்ல எல்லா மீடியாவும் டெல்லிக்கு ஷிப்ட் ஆகிடுவாங்க…இனிமே சத்தம் கொஞ்சம் அதிகமாயிடும்….இந்த நாட்டுல அரசியல்வாதிகள விட மீடியாக்கராங்க சத்தம் தான் வர வர தாங்க முடியல….என்ன கொடுமை சார் இது.

No comments: