Friday, October 2, 2009

ரியோ-டி-ஜெனிரோ ----- கடவுளின் நகரம் அடித்த கோல்டன் கோல்

உலகின் முதல் இரண்டு பொருளாதார சக்திகள் நீயா நானா என முஷ்டியை உயர்த்திக்கொண்டு களத்தில் மோதிக்கொண்டிருக்க சத்தமே இல்லாமல் சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஒட்டிவிட்டது கடவுளின் நகரம்.

2016 ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டியை நடத்துவதற்கு மாட்ரிட் (ஸ்பெயின்), டோக்கியோ (ஜப்பான்), சிகாகோ (அமெரிக்கா) என ஜாம்பவான்கள் மல்லுகட்டிக்கொண்டு நின்றிருக்க, எல்லோரையும் ஒரங்கட்டிவிட்டு வாய்ப்பை தட்டி சென்றுவிட்டது சம்பா சிட்டி ரியோ.

ஸ்பெயின் மன்னர் தனது பரிவாரங்களுடனும், ஜப்பான் பிரதமர் தனது குழுவுடன், பிரேசில் அதிபர் கால்பந்தாட்டத்தின் காட்பாதர் பீலேயுடனும் டென்மார்க்கில் தங்களுக்கான ஆதரவை திரட்டிக்கொண்டிருக்க சத்தமே போடாமல் வாஷிங்டனிலிருந்து பறந்துவந்துவிட்டார் ஒபாமா. அமெரிக்காவின் சார்பில் களத்தில் இருப்பது அவருடைய ஊர் சிகாகோ. மனைவியுடன் வந்து சிகாகோவிற்காக ஆதரவை கோரினார்…ஹூம் பந்தை ரியோ தட்டி சென்றுவிட்டது.

போட்டியில் இருந்த மற்ற மூன்று நகரங்களைவிட பொருளாதார ரீதியாகவும், கட்டமைப்பிலும் பின் தங்கியே இருந்தாலும் விடாமல் போரடியது ரியோ. சென்ற முறை வாய்ப்பை இழந்தபோதும் பொறுமை இழக்காமல் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்துகொண்டு வந்து இம்முறை நம்பிக்கையுடன் களத்தில் இறங்கினார்கள்..முயற்சி வீண்போகவில்லை.

கால்பந்தாட்ட கதாநாயகர்களின் அதிரடியாலும், சம்பா நடன குழுக்களின் வசீகரத்தாலும் உலகையே தன் பக்கம் திருப்பிய பிரேசில், ஒலிம்பிக் போட்டியை நடத்தபோகும் முதல் தென் அமெரிக்க நாடு என்ற பெருமையுடன் மீண்டும் ஒருமுறை தன்னை நோக்கி உலகையே திருப்பி உள்ளது.

அக்டோபர் 2, இந்தியாவிற்கு மட்டுமல்ல இனி பிரேசிலுக்கும் மறக்கமுடியாத நாள் தான்.

2 comments:

Toto said...

That's a surprise as Spain was leading in the first round. Good for RDJ to effectively use this opportunity to make their tourism/sports section more stronger.

-Toto
www.pixmonk.com

Rex said...

Thnx Toto..

The favourites were Rio & Chicago despite of tough competition from Madrid. Brazil's humble presentation & patience paid them. For Sure we can hear more Samba beats hereafter.