இவ்வளவு கேவலமா விளையாடுறதுக்கு பதிலா பேசாம நம்ம டீமை கலைச்சிட்டு எல்லோரும் போய் “லோகு பவித்ரா” பார்ட்டியில சேர்ந்துடலாம். 2006-இன் துவக்கத்தில் BTM கிரவுண்டில் எங்களை புரட்டிப் போட்டுக் கொண்டிருந்த எதிர் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த போது நண்பன் ஒருவன் உதித்த டயலாக் தான் மேலே சொன்ன அந்த வரிகள். “லோகு பவித்ரா” என்ற வித்தியாசமான பேரைக் கேட்டவுடன், கோல்டன் டக்அவுட் ஆன களைப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த எங்கள் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சிலிர்த்து எழுந்து உட்கார்ந்து கொண்டது. ஸ்கோர் கார்டை ஒரு பொடியனிடம் கொடுத்துவிட்டு “லோகு பவித்ரா” மேட்டர் பற்றிய விவாதத்தில் இறங்கினோம்.
ஐஐடி பிஸ்துங்க ஒரு ஆறேழு பேர் சேர்ந்து புது பொலிட்டிக்கல் பார்ட்டி ஆரம்பிச்சிருக்காங்க மச்சி..அந்த பார்ட்டி பேருதான் அது-ன்னு அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இன்னொருத்தன் ரொம்ப சீரியஸாகி அருகில் இருந்த SG பேட்டை கையில் எடுத்து பேசிக்கொண்டிருந்தவனை பார்த்து முறைக்க ஆரம்பித்தான்…பிறகுதான் விவரம் தெரிய ஆரம்பித்தது…”லோக் பரித்ரன்” என்ற பெயரைத்தான் நண்பன் வேறு மாதிரியாக கலாய்த்துக் கொண்டிருந்தது புரிய வந்தது. பேசிக்கொண்டிருக்கும்போதே நான் பி.இ. ECE மச்சி எனக்கு MLA சீட் கொடுப்பாங்களடா என அடுத்தவன் கேப்பில் கார் ஒட்டினான். மிகவும் போராடி மேட்ச்சில் வெற்றிகரமாக தோற்று வீட்டிற்கு திரும்பிய பின் செய்திதாள்களை துழாவியபோது இந்த Startup Party பற்றிய விவரம் கொஞ்சம் விளங்க ஆரம்பித்தது. இந்த கட்சியின் “Founding Fathers” Profile –ஐ பார்த்ததில் புருவம் உயர்ந்தது. ஐஐடி-க்குள் காலடி எடுத்து வைத்தவுடனே அடுத்த Hop ஹார்வர்டு / ஸ்டான்போஃர்டு / MIT / Virginia Tech / Princeton என முடிவு கட்டிவிடும் பசங்களுக்கு மத்தியில் இவர்கள் உன்னதமாக தெரிந்தார்கள். மொத்ததில் இவர்கள் கொடுத்திருந்த வாக்குறுதிகளையும் பில்டப்பையும் பார்த்தவுடன் Love @ First Sight feeling தான் வந்தது.
போதாத குறைக்கு அப்போது (2006) நடைபெறவிருந்த தமிழக சட்டசபை தேர்தலில் இவர்கள் போட்டியில் இறங்கப் போவதாக அறிவித்ததும் நண்பர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் இவர்களை கவனிக்க ஆரம்பித்திருந்தோம். ஏனென்றால் இவர்களின் முக்கிய கோஷமே ஊழலையும் சாதி அரசியலையும் எதிர்க்கப்போவதாக இருந்த அறிவிப்புதான். இவர்களின் தேர்தல் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் கழுதை சின்னத்தில் நின்றாலும் அந்த பட்டனை அமுக்கிவிடுவது என தீராத வேட்கையில் இருந்தோம். ஆயிரம் பொற்காசு நமக்குதான் சொக்கா என சொல்லி முடிப்பதற்குள் நக்கீரர் போல வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். தமிழகத்தின் பொற்கால ஆட்சியை எங்கள் ஓட்டின் மூலமாக கொண்டு வந்துவிடுவது என்ற எங்கள் கனவில் விதி இங்கிலாந்திற்கெதிரான அயர்லாந்து அணியைப் போல விளையாட ஆரம்பித்துவிட்டது. முதல் சறுக்கல் இவர்கள் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த தொகுதிகளின் பட்டியல். லிஸ்டில் இருந்த தொகுதிகளில் மைலாப்பூர் தவிர்த்து பிற இடங்களில் இவர்களின் பிரதான டார்கெட்டே திமுக-தான். இத்தனைக்கும் திமுக அப்போதிருந்தது எதிர்கட்சி வரிசையில். சேப்பாக்கதில் வேட்பாளரை நிறுத்திய இவர்களின் இயக்கம் ஆண்டிப்பட்டியை கண்டு கொள்ளாமல் விட்டவுடன், இவர்களின் “Integrity” மீது சந்தேகத்தின் நிழல் விழ ஆரம்பித்தது. இரண்டாவது சறுக்கல், இவர்கள் களமிறக்கிய வேட்பாளர்களின் தேர்வும் அதையொட்டி நடந்த சம்பவங்களும். குறிப்பிட்ட ஒரு வேட்பாளரை மட்டும் ஏகத்துக்கும் முன்னிறுத்தி மற்றவர்களை லூசில் விட்டது, இவர்களின் குறிக்கோள் என்னவென்பதை தெளிவாக உணர்த்திவிட்டது. நம்மூர் கதர் சட்டைக்காரர்களே இவர்களின் இந்த உள்ளடி விளையாட்டைப் பார்த்து வெல வெலத்துப் போயிருப்பார்கள். அப்படி ஒரு அதகளம்.
பெங்களூரிலிருந்து கிளம்பிச் சென்று இவர்களுக்கு ஓட்டளிக்கலாம் என ஆரம்பத்தில் பேசிக்கொண்டிருந்த சில நண்பர்கள் இவர்களின் அதிபுத்திசாலித்தனமான அரசியல் சாணக்கியத்தனத்தைப் பார்த்து மெய் மறந்து, சாந்தி சாகரில் ஒரு பிஸிபேலா பாத் சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல உதயசூரியனுக்கே குத்திவிடுவது என்ற முடிவுடன் ஊருக்கு கிளம்பிவிட்டார்கள். “Known Devil is better than an unknown Angel” பார்மூலா ரொம்ப சிம்பிள் பிரதர். இத்தனைக்கும் இந்த முடிவை எடுத்தவர்கள் அனைவரும் இருபதுகளின் மத்தியில் இருந்தவர்கள். சினேகா/பாவனா-வின் சமகாலத்தில் வாழ்ந்து தங்கள் பூர்வஜென்ம பலனை அடைந்துக் கொண்டிருப்பவர்கள். தீப்பொறி ஆறுமுகத்தையும், வெற்றிக்கொண்டானையும், நாஞ்சில் சம்பத்தையும் யாருன்னு கேட்கிற தலைமுறையைச் சேர்ந்தவர்கள். பெட்ரோலை “Gas” என்றும், தயிரை “Yogurt” என்றும் பிதற்றி திரியும் பிஞ்சுக் குழந்தைகள் :-)
2006 இல் ஒருவழியாக தேர்தல் முடிந்து கழகங்கள் செட்டில் ஆன பின்னும் இவர்கள் விடுவதாக தெரியவில்லை. அதுவரை புகைந்து கொண்டிருந்த உட்கட்சி (!) பூசலை வெளியே கொண்டுவந்து போட்டு உடைத்துவிட்டார்கள். தமிழகத்தை பொறுத்தவரை திமுக/அதிமுக இரண்டுமே ஊழலில் ஒன்றுக்கொன்று சளைத்தவை இல்லை. பாமக தன்னை ஒரு சாதிக்கட்சியாக முன்னிறுத்திக் கொள்வதில் எந்த தயக்கத்தையும் காட்டியதில்லை. நிலைமை இப்படி இருக்கும்போது இதற்கு மாற்றாக செயல்பட்டிருக்க வேண்டிய படித்த புத்திசாலிகள் ஒருவர் காலை ஒருவர் இழுத்து விட்டுக்கொண்டு மூன்று மாதத்திற்கு ஒருமுறை கோவித்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுவிடும் சம்சாரத்தைப் போல நடு ரோட்டிற்கு வந்துவிட்டார்கள். மூன்று மாதத்திற்குள் கட்சியை பை-டூ போட்டுவிட்டார்கள். சொல்லப்பட்ட காரணம், கட்சியின் வரவு/செலவில் நடந்த குளறுபடிகள் மற்றும் உறுப்பினர்களிக்கிடையேயான சமூக ஏற்றத்தாழ்வுகள். தமிழகத்தில் கட்சி ஆரம்பித்து மிக குறுகிய காலத்திற்குள் அதை தாங்களே உடைத்துக் காட்டிய சாதனை 2011 பிப்ரவரி வரை லோக் பரித்ரனிடமே இருந்தது. சில நாட்களுக்கு முன்னதாக “பெருந்தலைவர் மக்கள் கட்சி” என்ற பேரியக்கம் அந்த சாதனையையும் தட்டி பறித்துவிட்டது. சிறுவனாக இருந்தபோது எனக்குள் இனம் புரியாத வியப்பையும் ஈர்ப்பையும் ஏற்படுத்திய குமரி ஆனந்தனின் கா.கா.தே.க – கூட மூன்று மாதங்களுக்கு மேலாக உடையாமல் நிலைத்திருந்ததாக ஞாபகம். Sorry Guys :-(
அந்த தேர்தலில் தோற்றாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப்போல இவர்கள் விட்ட அறிக்கை அடுத்த தேர்தலில் இவர்களுக்கு ஒட்டளிக்கலாம் என கொஞ்சம் நம்பிக்கையுடன் இருந்த என்னைப் போன்றவர்களை ஏகத்துக்கும் சூடாக்கியிருக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. போதிய அனுபவம் இல்லாததல் தோற்றுவிட்டதாக ஏதோ காரணத்தை கூறினார்கள். அரசியலே தெரியாத விஜயகாந்த் கூட கொஞ்சம் Ground Work செய்த பின்னரே மதுரைக்கு வண்டியை திருப்பினார். Startup Ventures, Entrepreneurship என ஏகத்துக்கும் பேசுபவர்கள் போதிய Ground Work செய்யாமல் உள்ளே வந்தது யார் தவறென்று தெரியவில்லை. எல்லாவற்றிருக்கும் மேலாக சென்னையின் பன்னிரெண்டு தொகுதிகளைத் தாண்டி மற்ற தொகுதி மக்கள் எல்லாம் இவர்களின் புத்திசாலித்தனத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு தகுதியில்லாதவர்கள் என நினைத்து செயல்பட்டது எந்த அறிவாளி கொடுத்த ஐடியா எனத் தெரியவில்லை. தென் தமிழகத்தில் மட்டும் ஏதோ ஒரு தொகுதியில் ஒப்புக்கு யாரையோ நிறுத்தியதாக ஞாபகம்.
2006 ஏப்ரல்/மே மாத வெயிலில் ஜெ-வும், மு.க-வும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஓடி ஓடி பிரச்சாரம் செய்துக் கொண்டிருக்கும்போது, லோக் பரித்ரன் டீம் மட்டும் ஆயுத எழுத்து சூரியா ரேஞ்சிற்கு செய்தித்தாள்களில் கம்பீரமாக நின்றபடியே போஸ் கொடுத்துவிட்டு ஓட்டு வாங்கிவிடலாம் என நினைத்து வெறும் Powerpoint Presentation –ஐ வைத்து ஒப்பேற்றிக் கொண்டிருந்தது இவர்களுக்கு அரசியல் சுத்தமாக ஒத்துவராது எனத் தெளிவாக்கிவிட்டது. அண்ணா நகரில் ஐந்து இலக்கத்தில் ஓட்டு வாங்கியதை இவர்கள் கோடிட்டு பேசியதை படிக்க நேர்ந்தது. கொஞ்ச வருடங்களுக்கு முன்பாக கிணறு சின்னத்தில் நகரமன்ற உறுப்பினர் தேர்தலில் நின்று வென்று காட்டிய உறவினர் வாங்கிய ஓட்டுக்கள் நினைவில் வந்து போனது. இத்தனைக்கும் மனிதருக்கு ஐடிஐ-யே என்னவென்று தெரியாது…ஐஐடி எல்லாம் ஹூஹூம். மக்களை நேரிடையாக சந்தித்து குறைகளை புரிந்துகொண்டு வாக்குறுதி அளித்து சேர்த்த ஓட்டுக்கள்.
ஐஐடி Entrance தேர்வில் வெறும் பேப்பருடன் மல்லு கட்டுவதற்கே கடுமையான உழைப்பு தேவை என்பதை நன்கு உணர்ந்தவர்கள் மக்கள் ஓட்டை மட்டும் எளிதாக பெற்றுவிடலாம் என நினைத்ததை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. போதாத குறைக்கு படிக்காத அரசியல்வாதிகூட தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் செய்யத் தயங்கும் ஊழலையும் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் தங்கள் இயக்கத்தின் சக உறுப்பினர்களிடையே அனுமதித்துவிட்டு எந்த நம்பிக்கையில் மக்களை வழிநடத்த முன்வருகிறார்கள் எனத் தெரியவில்லை. யோசித்துப்பார்த்தால் பழைய ஆட்களே கொஞ்சம் பெட்டராக தெரிகிறார்கள். காமராஜர் போன்ற அப்பழுக்கற்றவர்களின் ஆட்சிக் காலத்தை நேரிடையாக கண்ட என் தாய்/தந்தையின் வயதை ஒட்டிய மனிதர்கள் மிகப்பெரிய புண்ணியவான்கள்.
நன்றி: காதலில் சொதப்புவது எப்படி என்ற தலைப்பை தங்கள் குறும்படத்திற்கு வைத்து, இந்த பதிவின் தலைப்பிற்கு வழிவகுத்தவர்களுக்கு :-)
Tuesday, March 15, 2011
Monday, February 28, 2011
30+30+30≠117
கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்குமென்றார்….அருமையான இந்த பாடல் வரிகளை தக்ஷ்ண பாரத் ஹிந்தி ப்ரச்சார சபாவில் ப்ராத்மிக் (அ) மத்ஃதிமா படித்துக் கொண்டிருக்கும் கதர் ஆசாமி யாரோ ஒருவர் தப்பு தப்பாக புரிந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் அதை மொழி பெயர்த்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களின் காதில் ஓதியும் விட்டிருக்கவேண்டும், இல்லையென்றால் அவர்களால் இந்த பதிவின் தலைப்பில் உள்ள லாஜிக்கே இல்லாத பார்முலாவை முன்வைத்து தொகுதி பங்கீட்டை ஆரம்பித்திருக்க முடியாது.
காங்கிரஸ்-90, பாமக-31, விசி+மற்ற கட்சிகள்-19, மொத்தம்-140. இதுபோக மீதம் உள்ள 94 தொகுதிகளில் திமுகவை போட்டியிடச் சொல்லி சொல்லாமல் சொல்கிறார்கள். என்ன கொடுமை சார் இது…மு.க மட்டுமல்ல அந்த கட்சியின் கடைசித் தொண்டன் கூட தங்கள் ஆட்சிக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்களையும் மீறி ஒரு கணம் சிரித்திருப்பார்கள் என நினைக்கிறேன். இந்த தேர்தலில் உடன்பிறப்புகள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். திமுகவும் அதிமுகவும் தங்களுக்கு ஒரு கோடி உறுப்பினர்கள் இருப்பதாக நீண்ட காலமாக சொல்லி வருவதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமான வாக்குகளை (தேர்தலில் தோற்றாலும்) வாங்கி அதை நிரூபித்துக் கொண்டும் இருக்கின்றன. இதே லாஜிக்கை எந்தக் கூட்டணிக்கு மாறினாலும் பாமக-வும் ஓரளவிற்கு நிரூபித்துக்கொண்டே தான் இருக்கிறது. அவர்கள் சொல்லும் வாக்கு சதவீதமும் பெரிய அளவில் இதுவரை சரிவை சந்திக்கவில்லை. சென்ற பாராளுமன்ற தேர்தலில் ஏறக்குறைய வாஷ்-அவுட் ஆகிய நிலையிலும் வாக்கு வங்கியில் பெரிய சேதாரம் இல்லை. மு.க-வும் இந்த கணக்கை பார்த்துதான் டாக்டரை தைலாபுரத்தில் இருந்து கிளப்பி கோபாலபுரத்துக்கு கொண்டு வந்துவிட்டார். அந்த பக்கம் அம்மா முதல்வர் கனவில் இருந்த விஜயகாந்தை தமிழக சிரஞ்சீவிV2.0 ஆக Downgrade செய்து சேதாரத்தை சாதுர்யமாக குறைத்துக்கொண்டார்.
அதிமுக+தேமுதிக+மதிமுக+பிறகட்சிகள் = திமுக+பாமக+விசி+பிறகட்சிகள்….இந்த போட்டி இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் போல கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும். இதில் காங்கிரஸ் எந்த பக்கம் போனாலும் அந்த கூட்டணிக்கு “எக்ஸ்ட்ரா லக்கேஜ்” நிலைமைதான். எம்ஜியார் மறைவிற்கு பின் நடந்த தேர்தலில் நான்கு முனை போட்டி என்பதால் காங்கிரஸ்காரர்கள் சைக்கிள் கேப்பில் கொஞ்சம் சீட்டை தேற்றிவிட்டார்கள்…ஆனால் அதிமுககூட்டணி Vs திமுககூட்டணி என களத்தில் நிலைமை மாறும்போது, காங்கிரஸ் மூன்றாவது அணியாக தனியாக நின்றால் கதர் சட்டைக்காரர்களின் வேட்டியை கருணையே இல்லாமல் உருவிவிடுவார்கள் தமிழக வாக்காளர்கள். இதுதான் உண்மை. எல்லாவற்றிற்கும் மேலாக காங்கிரஸ் தனித்து நின்றால் பிரியும் வாக்குகள் எந்த அணிக்கும் பெரிய சேதாரத்தை கண்டிப்பாக ஏற்படுத்தாது ஏனென்றால் பெரும்பாலான தொகுதிகளில் சுயேட்ச்சை வேட்பாளர்கள் அவர்களைவிட அதிகமான வாக்குகளை பெற்றுவிடுவார்கள்.
சமீபத்தில் பல லகரங்களில் தங்கள் கட்சியில் உறுப்பினர்களை சேர்த்துள்ளதாக செய்திகளை வெளியிடும் காங்கிரஸின் கணக்கைப் பார்த்தால் அக்கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை திமுக/அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும் போலத் தெரிகிறது. இந்த லாஜிக் படி பார்த்தால் அவர்கள் தனியாகவே நின்று ஆட்சியைப் பிடிக்கலாம். இதற்காக மெனக்கெட்டு ராஜாவை ஊழல் செய்வதற்கு தெரிந்தே அனுமதித்துவிட்டு, அதையும் கள்ளத்தனமாக டேப் செய்து திமுகவை இந்த அளவிற்கு எல்லாம் நெருக்கியே இருக்கவேண்டாம். மிகவும் கடுமையாக உழைத்து ஊராட்சி ஒன்றிய அளவில் காங்கிரஸ் கட்சியை வளர்த்துக்கொண்டிருக்கும் அக்கட்சியின் மாநில/மாவட்ட தலைவர்களை இது கேவலப்படுத்துவது போல இருக்கிறது.
இன்று மு.க இருக்கும் நிலையில் ஜெயலலிதா இருந்திருந்தால் டெல்லியில் இருந்து கூட்டணியை Dictate செய்தபடி குரலை உயர்த்தும் இதே நபர்களால் இப்படி பேசியிருக்க முடியுமா என்பது சந்தேகமே. அப்படியே பேசியிருந்தாலும் எந்த மாதிரியான மரியாதை/பதிலடி ஜெ-விடம் இருந்து கிடைத்திருக்கும் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் உள்ள காங்கிரஸ்காரர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். டெல்லியில் இருந்து பிரணாப் முகர்ஜி மட்டும் அல்ல அவருடைய தாத்தாவே வந்தாலும் போயஸ் கார்டன் எல்லையிலேயே உட்கார வைத்து தண்ணி காட்டியிருப்பார் அம்மா. ஐவர் குழு, அறுபத்து நான்கு நாயன்மார்கள் குழு போன்ற சமாச்சாரங்களையெல்லாம் கார்டனின் இண்டர்காமில் இருந்தபடியே டீல் செய்திருப்பார். கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் இதுதான் நடந்திருக்கும்.
திமுக முன்னாள் அமைச்சர் செய்த ஊழலை வைத்து தொகுதி பங்கீட்டை பேசவில்லை என காங்கிரஸ் பாவ்லா காட்டினாலும் உண்மை என்னவென்று தமிழ்நாட்டு அரசியலை கவனித்து வரும் அனைவருக்கும் தெரியும். இதே பாணியை திமுகவும்/அதிமுகவும் கூட இனிமேல் தமிழகத்தில் பின்பற்றலாம். நாற்பது வருடங்களுக்கு மேலாக ஆட்சியிலே அமராமல், ஒரு வாரியத்தலைவர் பதவியை கூட வகிக்காமல் இன்றைய தேதிக்கு தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவருடைய சொத்து மதிப்பும் எவ்வளவு என்பது அந்தந்த தொகுதி மக்களை கேட்டுப் பார்த்தால் தெரியும். கிழிந்த பனியனையும் அழுக்கு வேட்டியையும் கட்டிக்கொண்டு மக்களோடு மக்களாக பஸ்ஸில் பயணம் செய்த கக்கனும் காமராஜரும் இன்றிருந்தால் இன்றைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் “வறுமை” நிலையைப் பார்த்து மனமொடிந்திருப்பார்கள். அந்தளவிற்கு ஏழைப் பங்காளர்களாக மாறி தங்கள் குடும்பத்தை வறுமையில் வாட விட்டு விட்டு நாட்டு மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படி உழைப்பவர்கள் ஒரு 90 கேட்பதில் என்ன குறை இருக்க முடியும்.
மூன்று முறைக்கும் மேலாக தொடர்ந்து தமிழக சட்டமன்ற உறுப்பினாராக இருக்கும் ஒரு சில காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் சொத்து மதிப்பு இன்றைய சிட்டிங் மந்திரிகளின் சொத்தையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விடக்கூடிய அளவிற்கு பெரியது. இன்றைய தேதிக்கு திமுக/ முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு இணையாக பஸ் கம்பெனிகளையும், கல்லூரிகளையும், குவாரிகளையும் நடத்தும் காங்கிரஸ் தலைகளை பார்த்தால் திமுக/அதிமுகவே கொஞ்சம் பெட்டராக தோன்றுகிறது. ஏனென்றால் உடன்பிறப்புகளும், ரத்தத்தின் ரத்தங்களும் தங்கள் கட்சி ஆட்சிக்கு வரும்போது மட்டுமே கஜானாவில் கை வைக்க முடியும் ஆனால் கதர்வாலாக்கள் தமிழகத்தில் ஆட்சியில் அமராமலே வித்தை காட்டத் தெரிந்தவர்கள். தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கவே முடியாது என்று தெரிந்தும் உள்கட்சி தேர்தலில் நடக்கும் கலாட்டாக்களை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் உண்மை புரியும். கழகங்களுக்கு கொஞ்சமும் குறையாத சில்லரையை அவர்களும் அள்ளிக் கொண்டுத்தானிருக்கிறார்கள், சத்தமே போடாமல். ஊழலுக்கு எதிரான நியாயமான விசாரணை மேற்கொண்டால் ஒரு சில காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை தவிர மற்ற அனைவருமே திஹாரிலோ/பாளையங்கோட்டையிலோ/வேலூரிலோ வாசம் செய்வதற்கான அத்தனை தகுதியையும் கொண்டவர்களே.
ஆனால் தேர்தல் வந்துவிட்டால் இவர்கள் முன்வைக்கும் “ஊழலை ஒழிப்போம்” கோஷம் தான் கொஞ்சம் ஓவராக தெரிகிறது. வேண்டுமானால் ஊழலில் திமுக/அதிமுக-விற்கு சரிசமமான போட்டியில் இருப்பதை முன்வைத்து அதிகமான தொகுதியை கேட்கட்டும்..மக்கள் ஒன்றும் அதை ஆட்சேபிக்கப் போவதில்லை. ஏனெனில் அதில் ஒரு குறைந்தபட்சம் நியாயம் இருக்கிறது. இலட்சங்களில் நடந்து கொண்டிருந்த ஊழலை போபர்ஸ் மூலமாக கோடிகளுக்கு கொண்டு சென்ற ஒரு தகுதி போதும்….எவ்வளவு தொகுதியை வேண்டுமானலும் கேட்கலாம். அதைவிட்டு விட்டு சும்மானாச்சும் ஸ்பெக்ட்ரம் போன்ற வஸ்த்துக்களை எல்லாம் இழுப்பது வேலியில் போகிற ஓணானை இழுத்து வேட்டிக்குள் விட்டுக்கொள்கிற கதைதான். மத்தியில் அமர்ந்துக்கொண்டு காங்கிரஸின் நேர்முக/மறைமுக ஆதரவில்லாமல் ராஜாவால் இப்படி ஒரு மிகப்பெரிய தவறை செய்திருக்கமுடியுமா என்பது கேள்விக்குரியது. அப்படியே அவர் செய்திருந்தாலும் அவரைக் கண்காணித்துக் கொண்டு வேடிக்கை பார்த்தது அதைவிட கொடுமையான விஷயம். திமுகவை வழிக்கு கொண்டுவருவதற்காக மக்கள் பணம் விரயமாகிக் கொண்டிருந்ததை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்ததும் ஒரு வகையில் குற்றம்தான். இந்த ஊழல் நிரூபிக்கப்பட்டால் காங்கிரஸ், திமுக இரண்டு கட்சிகளுமே தண்டிக்கப்படவேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக திமுக மட்டுமே ஊழலுக்கு காரணம் என காங்கிரஸ் நம்பினால் அவர்கள் முதலில் செய்திருக்க வேண்டியது தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளிவந்திருக்கவேண்டும். இரண்டாவதாக எக்ஸ்ட்ரா லார்ஜ் கொடுங்கள், அட்லீஸ்ட் ஒரு லார்ஜ் அல்லது ஸ்மால் கொடுங்கள் என கேட்டு பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தியிருக்ககூடாது..மூன்றாவது தேர்தலில் வென்றால் ஆட்சியில் பங்கு போன்ற ஐயிட்டத்தை எல்லாம் தொட்டே இருக்க கூடாது. ஊழல் செய்ததாக நம்பும் கட்சியிடம் சென்று ஏன் ஆட்சியில் பங்கெல்லாம் கேட்கிறீர்கள்….மக்கள் உங்களையும் சேர்த்தல்லவா சந்தேகப்படுவார்கள்…கறைபடாத உங்கள் கைகளுக்கு இது தேவையா…..அந்த பக்கம் அம்மாவும் ஊழல் வழக்கில் சிக்கியிருக்கிறார்கள்…So best option is தனியாக நிற்பதுதான்…இதில் நிறைய சவுகரியம் உண்டு…234-லும் போட்டியிடலாம்…யாரிடமும் சென்று பேச்சுவார்த்தையெல்லாம் நடத்த தேவையில்லை. கட்சிக்காக உழைக்க, வேர்வை சிந்த புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இளம் துருக்கியர்கள் இருக்கும்போது தயங்காமல் களத்தில் உடனடியாக இறங்குவது மிகப்பெரிய பலனைக் கொடுக்கும்.
மேற்சொன்னதெல்லாம் அரசியல் கணக்கு, அதைவிடுத்து மக்கள் நலனிற்காக காங்கிரஸ் என்ன செய்துள்ளது என்பதை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்துவிடுவது ச்சால பாக செயலாக இருக்கும். ஊழல், கூட்டணி மிரட்டல் போன்றவற்றை விட நாட்டிற்காக இவர்கள் செய்திருக்கும் பணிகள் ஏராளம். எதிர்கட்சிகளை சமாளிப்பதற்காக நாட்டு முன்னேற்றத்திற்கு தேவையான சேது சமுத்திர திட்டத்தை சத்தமே போடாமல் Shift+Del அடித்து தூரத் தூக்கி போட்டுவிட்டு பாராளுமன்றம் அமைதியாக செயல்பட வழிவகுத்தது மிகப்பெரிய மைல்கல். ஊழலுக்கு எதிராக உறுதியாக போரடப்போவதாக முழங்கும் இவர்கள் நாட்டு நலனுக்கான இந்த திட்டத்தில் அந்தர் பல்டி அடித்ததை இதுவரை எந்த நீதியரசர்களும் கேள்வி கேட்கவில்லை. அடுத்து நதிநீர் இணைப்பு என்ற அத்தியாவசிய உடனடி தேவையை திரு. உதயமூர்த்தி மற்றும் திரு. நம்மாழ்வார் தொடங்கி உயர்திரு. டாக்டர். அப்துல் கலாம் வரை விஷயம் தெரிந்த பலர் தொடர்ந்து வலியுறுத்தியும், அந்த திட்டம் சுற்றுச் சூழலுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும் என காதில் ஐந்து முழப்பூவை சுற்றிவிட்டு ஒட்டு மொத்த தேசத்தையே இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுக்குள் பாலைவனமாக்கிவிடுவது என்ற நல்ல முடிவை எடுத்துவிட்டார்கள் டெல்லியில் இருந்து நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ்காரர்கள். நாட்டின் மிகப்பெரிய விஞ்ஞானிகள் எல்லாம் இனிமேல் DRDO/ADA/ISRO வில் வேலை செய்யாமல் காங்கிரஸில் சேர்ந்துவிடுவது நலம். மிகப்பெரிய அளவில் விஞ்ஞானத்தையும் சுற்றுச்சூழலைப் பற்றியும் தெரிந்தவர்கள் அங்குதான் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதுபோக நாட்டை அரித்தெடுத்துவிட்ட கறுப்புபணத்தை பிற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு திரும்ப கொண்டு வரவே மாட்டோம் என தினந்தோறும் கற்பூரம் அடிக்காத குறையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அற்புதமான முடிவு…ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது அடுத்து வரப்போகும் தலைமுறையினருக்கு…நீங்க கேளுங்க சார் 90 என்ன ஒரு குவார்ட்டர் கூட கேளுங்க..I mean 180 Seats :-)
இதுபோக தமிழ்நாட்டில் பேருந்தே போகாத சிறிய ஊர்களில் கூட முன்பெல்லாம் திமுக/அதிமுக கொடிகள் மட்டுமே பறந்துக்கொண்டிருக்கும். ஆனால் இப்போதெல்லாம் அங்கே காங்கிரஸ் கொடியை தவிர வேறு எந்த கொடியும் கண்ணில் படுவதேயில்லை. எழுபது சதவீத வாக்காளர்களை உள்ளடக்கியுள்ள தமிழக கிராமங்களில் திமுக/அதிமுக கரைவேட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருந்த முறுக்கு மீசை ஆசாமிகளுக்கு இப்போதெல்லாம் காங்கிரஸின் பனபாக லக்ஷ்மியையும், நவீன் ஜிந்தால் போன்றவர்களை மட்டுமே தெரிந்திருக்கிறது. ,மு.க மற்றும் ஜெ-வைப் பற்றி கேட்டால் ஏதோ “Alien” பெயரை கேட்டது போல திகைத்து நிற்கிறார்கள். இந்தளவிற்கு தமிழக அரசியலில் காலுன்றிய பின்னும் 90 எல்லாம் கேட்கக்கூடாது என துரைமுருகன் போன்றவர்கள் கூறுவது ஏற்ககூடியதாக இல்லை. ஆகவே நீங்கள் கேட்பதை நிறுத்தாதீர்கள், தொடர்ந்து கேளுங்கள்…காங்கிரஸ் கட்சியின் கடைசித் தொண்டன் தனது கரைவேட்டியை மாற்றிக்கொண்டு ஏதாவது ஒரு கழகத்திற்கு Migrate ஆகும் வரை தொடர்ந்து கேளுங்கள்….நாளை நமதே…நாடாளுமன்றம் நமதே…சட்டமன்றமும் நமதே…..நமஸ்தே….சுக்ரியா.

Thursday, February 24, 2011
கட்டுமரங்களும் கலஷ்நிஃக்வோகளும்
கார்கில் போர் உச்சமடைந்திருந்த நேரம், மத்தியிலிருந்த வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம் பொதுமக்களிடம் போர் நிவாரண நிதியை நன்கொடையாக வழங்குமாறு கோரிக்கைவிட, இந்தியாவின் மிகவும் முன்னேறிய மாநிலங்கள் (வர்த்தக தலைநகர் மும்பை அமைந்திருக்கும் மகாராஷ்டிரா உள்பட) கொஞ்சமாக கிள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்க, இந்தியாவின் தென்கோடியில் இருந்து கை நிறைய அள்ளிக் கொடுத்த மாநிலம்…தமிழ்நாடு. இன்றைய தேதிக்கு மற்ற எந்த மாநிலமும் தமிழகம் திரட்டிக் கொடுத்த நிதிக்கு அருகில் கூட வரவில்லை என்பது நிதர்சனம்.
எல்லையில் தீரத்துடன் போராடிக் கொண்டே தோட்டாக்களை தங்கள் மார்பில் வாங்கியபடி சரிந்துக் கொண்டிருந்த ஒவ்வொரு ஜவானுக்காகவும், பள்ளிக்குழந்தைகள் முதல் சிறையில் உள்ள தண்டனைக் கைதிகள் வரை அனைவரும் தங்களால் இயன்ற நிதியை திரட்டி அனுப்பி வைத்தார்கள். போரில் வீரமரணமடைந்துக் கொண்டிருந்த ஜவான்களில் பீகாரியையும், பெங்காலியையும், தமிழனையும், பஞ்சாபியையும் பிரித்துப் பார்த்து பேதமை காட்டும் அளவிற்கு தமிழகத்தில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் (இதில் எல்லா சாதியினரும் அடக்கம்) யாருக்கும் அன்று புத்தி பேதலித்திருக்கவில்லை. இன்றும் இல்லை. என்றும் இருக்கப் போவதும் இல்லை. மண்ணின் மைந்தன் மேஜர் சரவணன் வீழ்ந்த போது கலங்கியதில் கொஞ்சமும் குறைவில்லாத துயரம் ரைஃபிள் மேன் சஞ்சய் குமார் வீழ்ந்த போதும் வெளிப்பட்டது. இதுதான் தமிழக நடுத்தர குடும்பங்களின் பலம், பலவீனம் எல்லாமே. பதவியையும், மொழியையும், மாநிலத்தையும் வைத்து பிரித்து பார்க்கும் அளவிற்கு தமிழகத்தின் சராசரி குடும்பங்கள் இன்னமும் தங்கள் இதயத்தை இழந்துவிடவில்லை.
மீனவர்களின் விஷயத்தில் நடந்த/நடந்துக்கொண்டிருக்கும் நிகழ்வுகள் அந்த நிலையை சிதைத்துவிடுமோ என்கிற நியாயமான அச்சம் சமீப காலங்களில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது என்பது கசப்பான உண்மை. தஸ்லிமாவின் சம உரிமைக்காகவும், தலாய் லாமாவின் போரட்டத்திற்காகவும், ஆங்-சான்-சூ-யின் விடுதலைக்காகவும் தன்னுடைய குரலை உயர்த்தும், ஆதங்கத்தை வெளிப்படுத்தும் என் தேசம் தன் சொந்த குடிமகன்களின் விஷயத்தில் பாரபட்சம் காட்டுவதை எந்த நிலையிலும் நியாயப்படுத்த முடியவில்லை. மீனவர்கள் தவறுதலாக எல்லைத் தாண்டிச் சென்றிருந்தாலும் கொல்லுமளவிற்கு கொடிய குற்றம் இல்லை அது. இதை நன்றாக உணர்ந்திருந்தும் உடனடியான தெளிவான நடவடிக்கையை மேற்கொள்ளாமல் பூசி மொழுகுவது ஜனநாயக அரசியலாகத் தெரியவில்லை. தெரிந்தே எல்லை தாண்டி வந்து விக்டோரியா டெர்மினஸிலும், தாஜ் ஹோட்டலிலும் புகுந்து விளையாடியவர்களுக்கு உணவு/உடை கொடுத்து அவர்களுக்காக வாதாட அரசு சார்பில் வக்கீலையும் ஏற்பாடு செய்து ஜனநாயகத்தை நிலைநாட்டும் அரசாங்கம், நிராயுதபாணியாக தவறிச் சென்றுவிடும் தன் சொந்த குடிமகன்கள் கொல்லப்படுவதை கண்டிக்காமல் இருப்பது ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரையும் செருப்பால் அடிப்பதற்கு சமமானது. Sometimes It’s better to live under strong Dictatorship than weak Democracy.
இன்னொருபுறம் பாதிக்கப்பட்ட மீனவர்கள் வசிக்கும் தொகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் இதுவரை இந்தப் பிரச்சனைக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அறிக்கைவிடுவதனாலோ, தலைவரையோ (அ) அம்மாவையோ கூட்டி வந்து பாதிக்கப்பட்டவர்களின் கைகளில் சில லகரங்களை திணித்துவிட்டு சென்று விடுவதாலோ பிரச்சனை தீரப்போவதில்லை. ஓட்டு போடுவதற்கு மட்டும்தான் மக்கள் தேவை பிறகு அவர்கள் தேவை இல்லை என்ற போக்கு இருக்கும்வரை இவர்களிடம் இருந்து ஆக்கப்பூர்வமாக எதையாவது எதிர்பார்த்து நின்றால் உலகின் மிக மோசமான முட்டாள் கூட நம்மைப் பார்த்து சிரிப்பான்.
ஒவ்வொரு முறை பிரச்சனை ஏற்படும்போதும் வெளியுறவுத்துறை ஆட்களை ஏதோ டூர் அனுப்புவதுபோல அனுப்பி Reactive ஆக செயல்படுவதை விட Proactive ஆக செயல்படுவது எப்படி என டெல்லியில் இருப்பவர்கள் யோசித்துவிடுவது நலம். Twitter-ம் Facebook-ம் உலகையே புரட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னமும் புறாவின் காலில் துண்டு சீட்டை கட்டி அனுப்புவது போல நிருபமா ராவிடம் கடிதம் கொடுத்து அனுப்பி எத்தனை நாளுக்கு பாவ்லா காட்டிக்கொண்டிருக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.
Prevention is better than Cure…வேறு எதுவும் சொல்வதற்கில்லை.

Subscribe to:
Posts (Atom)