ரிச்மண்ட் ரோட் சிட்டி பேங்க் ஏ.டி.எம் கிட்ட ஈவினிங் ஆறுமணிக்கு மீட் பண்ணலாம்..ஒ.கே.வா…..Bye…அடுத்த முனையில் இருந்த கிருத்திகா ஏதோ சொல்லி முடிப்பதற்குள் மொபைலை கட் செய்து பாக்கெட்டுக்குள் திணித்துவிட்டான் திரு என்கிற திருக்குமரன். எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் இருந்து கிளம்பி சில்க்போர்ட் தாண்டுவதற்குள் மணி ஆறுக்கு மேல் ஆகிவிடும், அவனை உடுப்பி கார்டனுக்கு வரச் சொல்லிவிடலாமா என யோசித்தபடியே அவள் மொபைலை எடுக்க, Thiru Calling என அவளின் மொபைல் மறுபடியும் சிரிக்கத் தொடங்கியது. கைகளுக்கிடையில் திமிரிக்கொண்டிருந்த கோல்டன் ரிட்ரீவருடன் கேஷுவலாக நின்று கொண்டிருந்த திரு, அவளின் ஐபோன் ஸ்கிரீன் முழுவதிலும் ஃபிக்ஸெல்களாய் கரைந்து பரவியிருந்தான்.
கே.கே ( கிருத்திகா என்று அவள் அப்பா ஆசையாக வைத்த பெயர் திருவால் கே.கே என சுருக்கப்பட்டிருந்தது) சொல்ல மறந்துட்டேன்…..என்ன திரு…ஈவினிங் வரும்போது முடிஞ்சா லைப்ரரி போய் நான் கேட்ட புக் இருந்தா கலெக்ட் பண்ணிட்டு வரமுடியுமா….Sorry to bother you K.K… சொல்லிக்கொண்டே போனவனை இடைமறித்தாள்…திரு, No Issues, let me try to get it……ஹேய் திரு, இன்னொரு விஷயம், Can we meet at UG??...ரிச்மண்ட் ரோடு வர லேட்டாயிடும், பீக் அவர்ஸ், ட்ராபிக் ப்ராப்ளம் இருக்கும். UG வந்துடுறியா?…..I want to meet you today திரு. கெஞ்சலாகவும் இல்லாமல் அதிகாரத் தோரணையும் இல்லாமல் யதார்த்தமாக பேசும் கே.கே-வை திரு எப்போதுமே தட்டியதில்லை. யதார்த்தமான பெண்களிடம் தோற்றுப்போகும் ஆண்களின் அடையாளம் திரு. சரி வரேன் .என சொல்லிவிட்டு மொபைலை கட் செய்தவனின் தோளை யாரோ லேசாக உளுக்க, திரும்பியவனின் பின்னால் ப்ரவீண் நின்று கொண்டிருந்தான். யாருடா போன்ல என கேட்டவனிடம் பதில் ஏதும் சொல்லாமல் கண்களை சிமிட்டபடியே “பாக்கெட் இருக்காடா” என கேட்டுக்கொண்டே தன் இருக்கையை விட்டு எழுந்தவன், ப்ரவீனின் முதுகில் கைவைத்து தள்ளியபடியே லிப்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
லெவல் ஸீரோவில் சாஃப்ட் லேண்ட் ஆன அந்த OTIS லிப்டின் கதவுகள் மெல்ல விலக நேர் எதிரில் ரிசப்ஷனில் அமர்ந்திருந்த சுதா ஹெக்டே திருவை பார்த்தவுடன் முகம் முழுவதும் புன்னகையை காட்ட….”What’s up Darling” என கேட்டபடியே வெளிப்புற மெயின் கேட்டை திறந்துக்கொண்டு காம்பவுண்டை ஒட்டி இருந்த அந்த சிறிய கடையை நோக்கி இருவரும் நடந்தார்கள். டீயா, காபியா மாம்ஸ், கேட்ட பிரவீனிடம்….டீ டா என சொல்லிவிட்டு அவன் நீட்டிய பாக்கெட்டில் இருந்து கிங்ஸை எடுத்து பற்ற வைத்துக்கொண்டான்
இருவரின் கைககளிலும் டீயும், சிகரெட்டும் சிக்கிக்கொள்ள, ப்ராஜெக்ட் எப்படி போகுதுடா என கேஷுவலாக கேட்ட ப்ரவீனிடம் டெஸ்டிங் டீம் இன்னும் feedback தரலடா…..Bug இருக்கான்னு பார்க்க சொன்னா இவனுக ஏதோ அரசியல் அமைப்பு சட்டத்த திருத்த சொன்ன மாதிரி ஏகத்துக்கும் படத்த போடுறானுக……சரி விடு திரு .எல்லாம் புதுபசங்க கொஞ்ச நாளைக்கு அப்படிதான் இருக்கும். ஹேய் கேட்க மறந்துட்டேன்…லாஸ்ட் வீக் மேட்ச் என்னாச்சு, கேட்ட ப்ரவீனை லேசாக முறைத்துவிட்டு, த்தா நம்ம பசங்க கவுத்துட்டானுங்கடா….மூணு கேட்ச் ட்ராப்…..ப்ராக்டிஸ்க்கு வரச்சொன்னா ஒரு பயலும் கிரவுண்ட் பக்கம் தலையே வச்சி படுக்க மாட்டேன்கிறானுக….சண்டே காலையில போஃன போட்டு ஓவ்வொருத்தனையும் ரெடி பண்றதுக்குள்ள ப்ரஷர் எகிறிடுது…..நீ ரெண்டு வாரத்துக்கு ஒருமுறை உன்னோட ஹீரோயின பார்க்க ஊருக்கு ஓடிடுவ…அப்புறமா வந்து மேட்ச் ரிசல்ட் என்னாச்சுன்னு கேட்டு கடுப்பேத்து….மவனே டீம் ஸ்பிரிட் இல்லடா ஒருத்தன்கிட்டேயும்….ஒன்னும் பண்ணமுடியாது அவ்ளோதான்…..லேசாக உணர்ச்சிவசப்பட்ட திருவின் தோளை தட்டியபடியே, சரி சரி விடு மாமா….ஏன் இதுக்குபோய் இவ்ளோ டென்ஷன் ஆகுற….இந்த வாரம் திரும்பவும் அந்த டீம் கூட மேட்ச் ரெடி பண்ணு….கிழிச்சிடுவோம்……குட்டி, பாபு, சுரேஷ் மூணு பேரையும் தள்ளிட்டு வரேன்….அடிச்சி ஜெயிச்சிடலாம் விடு….என சொல்லிவிட்டு டீக்கடைகாரரிடம் எஷ்டு என உடைந்த கன்னடத்தில் கேட்டபடியே பத்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டி, மீதி சில்லரையை கணக்கில் வைக்குமாறு சைகை செய்துவிட்டு திரும்பவும் ஆபிஸுக்குள் நுழைவதற்கு திரும்பும்போது திருவின் சட்டைப்பையில் இருந்த ப்ளாக்பெரி லேசாக அதிரத் தொடங்கியது……திருவிற்கு அறிமுகம் இல்லாத புது நம்பர்….சிறிய யோசனைக்குப் பிறகு எடுத்து ஹலோ சொன்னவுடன் அடுத்த முனையில் ஒரு பெண் பதற்றத்துடன் கேட்டாள்…மே ஐ ஸ்பீக் வித் மிஸ்டர். திரு?
(தொடரும்
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
தல,
கதை கலக்குது.....சுஜாதாவையும்,ராஜேஷ் குமாரையும் கலந்து கட்டி அடிச்சா மாதிரி இருக்கு.
அடுத்த எபிசோட் எப்போ
Post a Comment